ஜாதகத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி.?

Advertisement

How To Find Kula Deivam From Horoscope in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக குலதெய்வம் என்பது மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். ஒரு குடும்பத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு குலதெய்வ அருள் மிகவும் முக்கியம். ஆனால், இக்காலத்தில் பல குடும்பங்கள் குலதெய்வ வழிபாடு செய்வதில்லை. இன்னும் பெரும்பாலானவர்களுக்கு குடும்பத்திற்கான குலதெய்வம் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். ஆகையால், இப்பதிவின் வாயிலாக, ஜாதகத்தின் மூலம் குலதெய்வம் கண்டுபிடிப்பது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எந்தவொரு செயலை செய்வதற்கு  குலதெய்வத்தை வணங்கி தொடங்குவதன் மூலம் எடுத்த காரியம் வெற்றி பெரும். அதனால், தான் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் குலதெய்வம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் குலதெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைத்தால் மட்டுமே நன்மைகள் நடக்கும். ஆகையால், குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம்.

ஜாதகத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி.?

ஜாதகத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி

குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஜாதகத்தை வைத்து குலதெய்வத்தை அறிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஆகையால், ஜாதகத்தில் 5 ம் இடத்தில் உள்ள கிரகங்களை வைத்து உங்கள் குடும்பத்திற்கான குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்.

அதாவது, ஜாதகத்தில் லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5-ஆம் இடம் குலதெய்வத்தைக் காட்டும்.

சூரியன்:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் சூரியபகவான் இருந்தால் உங்களுக்கு சிவன் சம்மந்தப்பட்ட தெய்வங்கள் உங்களுக்கு குலதெய்வமாக இருக்கும் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

சந்திரன்:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன் உங்கள் குடும்பத்திற்கான குலதெய்வமாக இருக்கிறாள் என்பதாகும்.

செவ்வாய்:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வமாகவும் இருக்கும்.

புதன்:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் புதன் இருந்தால் உங்கள் குடும்பத்திற்கு மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயங்கள் குலதெய்வக் கோயிலாக இருக்கும்.

குரு:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள் உங்களுக்கு குலதெய்வ கோவிலாக இருக்கும்.

சுக்கிரன்:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான கோவில்கள் உங்களுக்கு குலதெய்வ கோவிலாக இருக்கும்.

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்

சனிபகவான்:

ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் சனிபகவான் இருந்தால், எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், வீரனார் உள்ளிட்ட தெய்வங்கள் குலதெய்வமாக இருக்கும்.

ராகு:

ராகுபகவான் ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் இருந்தால், ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள் அல்லது எல்லை தெய்வங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு குலதெய்வமாக இருக்கும்.

கேது:

கேதுபகவான் ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் இருந்தால், ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி  போன்ற ஆலயங்கள் குலதெய்வமாக இருக்கும்.

👉மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் ஜாதகத்தின் மூலம் குலதெய்வத்தினை அறிந்துகொள்வதற்காக அடிப்படையான ஒன்று. ஜாதகத்தின் மூலம் துல்லியமாக உங்கள் குலதெய்வம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இந்த 3 பொருட்களை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement