பெயரை வைத்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.? | How to Find Zodiac Sign by Name in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். மனிதனுடைய வாழ்வில் ஜாதகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் தான் குழந்தை பிறந்ததும், குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ராசியும், நட்சத்திரமும் கணக்கிட்டு ஜாதகம் எழுதுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கு ஜாதகம் என்பதே இருக்காது. எனவே, அப்படி இருப்பவர்களுக்கு பெயரினை கொண்டு ராசியை அறிந்து கொள்ளலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு மனிதனுடைய வாழக்கையில் நடக்கும் நன்மை, தீமை என அனைத்தயும் தெரிந்து கொள்ள ஜாதகம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால் தான் வீட்டில் உள்ள பெரியோர்கள் அடிக்கடி ஜாதகம் பார்க்க செல்வார்கள். ஜாதகத்திற்கு அடிப்படையான ஒன்று ராசியும், நட்சத்திரமும் தான். ஆனால், சிலருக்கு பிறந்த தேதி என்பது தெரியாமல் இருக்கும். எனவே, அப்படி இருப்பவர்கள் பெயரினை வைத்து அவர்களின் ராசியை கணிக்கலாம்.
பெயரை வைத்து ராசி கண்டுபிடிப்பது எப்படி.?
மேஷம்:
ஜோதிடத்தின்படி, பெயரின் முதல் எழுத்து, அ, ச, சு, சே, ல, லீ, லு, லே ஆகிய வரிசையில் இருந்தால் மேஷம் ராசி என்று கூறப்படுகிறது.
ரிஷபம்:
உங்கள் பெயர் ஆனது, உ, ஏ, இ, ஓ, த, தி, வோ ஆகிய வரிசைகளில் இருந்தால் ரிஷபம் ராசி என கணக்கிடப்படுகிறது.
மிதுனம்:
பெயரின் முதல் எழுத்து கே, கோ, க, கா, சா, ஹ, ட ஆகிய வரிசையில் தொடங்கினால் மிதுனம் ராசி கணிக்கப்படுகிறது.
கடகம்:
பெரும்பாலும் ஹ, ஹே, ஹோ, டா, ஹி மற்றும் டோ வரிசையில் பெயரின் முதல் எழுத்து தோன்றினால் கடக ராசி என கூறப்படுகிறது.
சிம்மம்:
பெயரின் முதல் எழுத்து ம, மே, மி, டே, டா மற்றும் டி போன்ற வரிசைகளில் தோன்றினால் சிம்ம ராசி என கூறப்படுகிறது.
கன்னி:
ஜோதிடத்தின்படி, பெயரின் முதல் எழுத்து, ப, ச, ந, பெ, போ மற்றும் பா வரிசைகளில் தோன்றினால் கன்னி ராசி என கணிக்கப்படுகிறது.
துலாம்:
ரே, ரோ, ரா, தா, தே மற்றும் து ஆகிய வரிசைகளில் பெயர் இருந்தால் துலாம் ராசி என கூறப்படுகிறது.
விருச்சிகம்:
பெரும்பாலும் லோ, நெ, நீ, நு, யா மற்றும் யீ வரிசையில் பெயர் உள்ளவர்களுக்கு விருச்சிகம் ராசியாக இருக்கும்.
தனுசு:
ஜோதிடத்தின்படி, தா, யே, யோ, பி, பு, பா, டா வரிசையில் பெயருடையவர்களுக்கு ராசி தனுசாக இருக்கும்.
மகரம்:
பெயரின் முதல் எழுத்து ஜா, ஜி, கோ, கு, க, கி மற்றும் போ வரிசையில் இருந்தால் மகரம் ராசியாக இருக்கும்.
கும்பம்:
கே, கோ, சா, சு, சோ மற்றும் த வரிசையில் பெயர் உள்ளவர்களுக்கு கும்பம் ராசியாக இருக்கும்.
மீனம்:
ஜோதிடத்தின்படி தி, சா, சி, ஜ, தொ மற்றும் து வரிசையில் பெயர் இருந்தால் மீனம் ராசியாக இருக்கும்.
ஜாதகத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |