துடைப்பம் வைக்கும் திசை | How to Keep Broom in House as Per Vastu in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்.? (How to Keep Broom as Per Vastu in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் வைப்பதற்கு உகந்த திசை என்று ஒன்று இருக்கும். அதேபோல், வீட்டில் உள்ள துடைப்பத்தை வைப்பதற்கும் உகந்த திசை உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
இந்துக்கள் முறைப்படி, துடைப்பம் லட்சுமியின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே, துடைப்பம் தானே என்று அதனை, தூக்கி எறிதல், வேகமாக வைத்தல், மிதித்தல், உதைத்தல் போன்ற செயல்களை செய்தல் கூடாது. நம் வாழ்க்கை நிலைக்கும், துடைப்பத்தை வைக்கும் திசைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்.படுகிறது. எனவே, துடைப்பத்தை வாஸ்து படி சரியான திசையில், சரியான முறையில் வைக்க வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
துடைப்பம் வீட்டில் எப்படி வைக்க வேண்டும்.?
துடைப்பம் வைக்கும் திசை: வீட்டில் துடைப்பத்தை தெற்கு மற்றும் மேற்கு இடையே வைப்பது நல்லது என்று கூறப்படுகிறது. வடமேற்கு அல்லது மேற்கு மூலையில் வைப்பது இன்னும் சிறந்தது. வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசைகளில் துடைப்பத்தை வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக, துடைப்பத்தை எப்போது படுத்தவாரே வைக்க வேண்டும். ஒருபோதும் செங்குத்தாக வைக்க கூடாது. மேலும், துடைப்பத்தின் முகம் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இதுவே, துடைப்பம் வைப்பதற்கான சரியான திசையும் முறையும் ஆகும். இவ்வாறு வைப்பதன் மூலம் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும்.
துடைப்பத்தை எப்படி, சரியான திசையில் சரியான முறையில் வைப்பது மிகவும் அவசியமோ, அதேபோல், துடைப்பத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்யும்போதும, எந்த திசையில் இருந்து பெருக்க வேண்டும் என்பதும் அவசியம். எனவே, துடைப்பத்தை கொண்டு பெருகும்போது மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து பெருக்க/சுத்தம் செய்ய தொடங்க வேண்டும்.
வீட்டினை பெருக்கி சுத்தம் செய்த பிறகு, குப்பைகளை மூலையில் ஒதுக்கி வைக்காமல், குப்பை கோடிகளில் கொட்டி விட வேண்டும். குப்பைகளை குவித்து வைத்தால் வீட்டில் பணக்கஷ்டம் வரும்.
இவ்வாறு செய்வதன் மூலம், லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்வதுடன், லட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
இறந்தவர்களின் ஃபோட்டோவை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |