குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

குலதெய்வம் தெரியாதவர்கள்

குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?

குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து சில வழிகள்: வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

 

சரிவாங்க இந்த பகுதியில் குலதெய்வம் தெரியாதவர்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி?Kula Deivam Therinthu Kolvathu Eppadi Tamil..!

குலதெய்வம் என்றால் என்ன?

முதலில் குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும்.

குல தெய்வம் தான் நமக்கு எளிதில் அருளினை தரும். மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.

சிறு தெய்வம் என்று அவற்றை அலட்சியம் படுத்தக்கூடாது அதன் சக்தியை அளவிட முடியாது.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை கொண்டது. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றது.

குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு விசேஷங்களை முதலில் குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள்.

நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும்.

காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள், தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள்.

ஒருவேளை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் நாம் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.

குலதெய்வம் தெரியாதவர்கள், அந்த குலதெய்வம் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது.

துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி ? ஆன்மிக தகவல்கள்..!

இந்து சமுதாயத்தில் ஒரு சுப செயலை துவங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வணங்கிய பிறகே புதிய முயற்சிகளை தொடங்க வேண்டும் என்பது கட்டாய விதி.

அதுபோல குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொண்டு அந்த குலதெயவத்தையும் வணங்கி வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலில் பொங்கல் படைத்து வணங்கினால், அந்த பொங்கல் பொங்குவது போல வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

அனைத்து தடைகளும் விலக பரிகாரம்:

குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்கள் எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குல தெய்வம் (kula deivam) பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம்.

அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.

குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்வது எப்படி?

குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள சில ஆன்மிக குறிப்புகள். தமது குலதெய்வம் தெரியாதவர்கள் எப்படி தங்களின் குல தெய்வத்தை தெரிந்துக்கொள்வது என்றால், வெள்ளி கிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, “எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும்.

உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா” என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குல தெய்வம் (kula deivam) பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.

பொதுவாக யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவர்கள் நம்மை ஒரு நாள் தேடி வருவார்கள். டெலிபதி என்று கூறுவார்களே… அந்த டெலிபதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வ செயலுக்கும் இது பொருந்தும்.

தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும் தான், தன் குல மக்களை காக்க குல தெய்வம் (kula deivam) வாசம் செய்கிறது.

அதனால் தான் நம் முன்னோர்கள் வாசல் படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சள் – குங்குமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள்.

குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை பற்றி தெரிந்து கொண்டு குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான்.குலதெய்வம் வீட்டிற்கு வர…???

குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை தெரிந்து கொண்ட பின்பு அந்த குலதெய்வம் வீட்டிற்கு வர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி  இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியினை பின்பற்றி எதாவது ஒரு குலதெய்வத்தை வழிபடுவார்கள்.

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையை போல் நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகும்.

நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது குலதெய்வம் தான் முதலில் முன் வந்து நிற்கும். மற்ற தெய்வங்கள் எல்லாம் அதன் பிறகு தான் வரும் என்று கிராமத்து பெரியவர்கள் சொல்வார்கள்.

இருப்பினும் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம், அதாவது குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து காது குத்துவது முதல் அனைத்தும் குலதெய்வ கோவில்களில் வைத்துதான் செய்ய வேண்டும்.

சரி குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை தெரிந்து கொண்ட பின்பு அந்த குலதெய்வம் வீட்டிற்கு வர என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றி  இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க

குலதெய்வம் தெரியாதவர்கள் – நம் குலதெய்வம் வீட்டிற்கு வர என்ன செய்ய வேண்டும்…???

குலதெய்வம் வீட்டிற்கு வர வழிபாடு: மஞ்சள், மண், சந்தணம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் பித்தளை அல்லது செப்பு ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.குல தெய்வம் வீட்டில் தங்க வழிமுறை..!

வணக்கம்… குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை தெரிந்து கொண்ட பின்பு அந்த குலதெய்வம் வீட்டிற்கு வர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி  தெரிந்து கொண்டோம், நம் வீட்டிற்குள் வந்த குலதெய்வத்தை வீட்டில் தங்க வைப்பது எப்படி என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

குல தெய்வம் வீட்டில் தங்க வழிபாடு: ஒரு கலச சொம்பு பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து அதில் கொஞ்சம் பன்னீர் ஊற்றவேண்டும்.

பன்னீர் எந்த அளவிற்கு ஊற்றுகிறோமோ அதே அளவிற்கு சுத்தமான நீரை ஊற்றி வைக்க வேண்டும்.

குல தெய்வம் வீட்டில் தங்க வழிபாடு: பின்பு அந்த சொம்பு பாத்திரத்தை நூல் கொண்டு சுற்ற வேண்டும்.

நூல் சுற்ற தெரியாதவர்கள், கடைகளில் கலச சொம்பிற்கு கட்டும் சிறியளவு பட்டு துணியை வாங்கி, அத்துணியை சொம்பின் மீது சுற்றிவிடவும்.

குல தெய்வம் வீட்டில் தங்க வழிபாடு: பின்பு உங்கள் பூஜையறையில் ஒரு மரப்பலகை அல்லது பீடத்தை வைத்து, அதில் தலைவாழை இலையை போட்டு, அதில் பச்சரிசி ஒரு ஆழாக்கு அளவு பரப்பி, அதில் இந்த கலச சொம்பை வைக்க வேண்டும்.

இந்த சொம்பிற்குள் வெற்றிலைகள் அல்லது மாவிலைகளை செங்குத்தாக வைத்து, அதற்கு நடுவில் ஒரு வாழைப்பூவை நுனி பகுதி மேல்நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.

குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை தெரிந்து கொள்ள மற்றும் குல தெய்வம் வீட்டில் தங்க வழிபாடு:

1. ஓம் பவாய நம.

2. ஓம் சர்வாய நம.

3. ஓம் ருத்ராய நம.

4. ஓம் பசுபதே நம.

5. ஓம் உக்ராய நம.

6. ஓம் மஹாதேவாய நம.

7. ஓம் பீமாய நம.

8. ஓம் ஈசாய நம.

குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொண்டு, மேலே உள்ள மந்திரத்தை 108 முறை துதித்தவாறு வில்வ இலைகள், ஊமத்தம் பூக்கள் கொண்டு கலசத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

இப்பூஜையை மூன்று நாட்களுக்கு மட்டும் செய்தால் போதும். பூஜை முடிந்த பிறகு கலசம் வைக்கப்பட்ட பச்சரிசியை சமைத்து சாப்பிடலாம்.

பூஜைக்கு வைக்கப்பட்ட வாழைப்பூவையும் பக்குவம் செய்து சாப்பிடுவது நல்லது. கலசத்தில் உள்ள நீரை நமது வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

அந்நீர் மீதம் இருந்தால் நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.

குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொண்டு மேற்க்கண்ட முறையில் பூஜை செய்பவர்களின் இல்லத்தில் அவர்களின் குலதெய்வம் நிரந்தரமாக வாசம் செய்து நமக்கு நல்லருள் புரியும்.குலதெய்வம் அருள் கிடைக்க ஸ்லோகம்..!

பொதுவாக குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொண்டு, அவரவர் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குலதெய்வ அருள் கிட்டும்.

குலதெய்வம் அருள் கிடைக்க ஸ்லோகம்:-

ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:

பொருள்:-

ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன்.

அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் குல தெய்வ அருள் கிடைக்கும்.குலதெய்வம் கனவில் வர..!

இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்துடன் பேச, தரிசிக்க உதவும் மந்திரம்:-

இம்மந்திர ஜெபத்தின் பயனாக நமக்கு விருப்பமான தேவதையின் ( இஷ்ட தெய்வம்,குலதெய்வம்) தரிசனம் கனவில் கிடைக்கும். சில நாட்களில் அந்த தெய்வத்தோடு பேசி நம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். மேலும் உறங்கும் முன் ஏதேனும் ஒன்றை கனவில் காண வேண்டுமென்றால் ஊதுபத்தி ஏற்றிச் செம்பில் தண்ணீர் வைத்துக் கொண்டு இன்ன காரியம் அறியவேண்டும் என்று சங்கல்பம் செய்து 108 தடவை மந்திரம் ஜெபித்து செம்பில் உள்ள தீர்த்தத்தைக் குடித்து உறங்கினால் வேண்டியது கனவில் வெளிப்படும்.

குலதெய்வம் கனவில் வர மந்திரம்:-

ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே
இஷ்ட தர்ஷய நமஹா!!

இம்மந்திரம் பல தாந்த்ரீகர்கள்,
ஜோதிடர்கள் மற்றும் யோகிகளால்
பயன்படுத்தப்படுகிறது. குல தெய்வம் அறியும் வழிபாடு.கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்?

கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

அவரவர் குலவழக்கப்படி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

கனவில் குலதெய்வத்தை காண்பது எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

குலதெய்வத்தை கனவில் காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதைக் குறிக்கிறது.

புகழ் மற்றும் மதிப்புகள் உயரும்.

தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.

மேலும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்