வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் தெரியுமா.?

Updated On: October 3, 2024 1:24 PM
Follow Us:
how to keep betel leaf in front of god in tamil
---Advertisement---
Advertisement

How To Place Betel Leaf in Pooja | வெற்றிலை வைக்கும் முறை

பொதுவாக எந்தவொரு சுப அசுப காரியமாக இருந்தாலும் அதில் முதலில் வைக்கப்படுவது வெற்றிலை பாக்கு. பூஜை சாமான் வாங்கும்போது மற்ற சாமான்களை மறந்தாலும் வெற்றிலை பாக்கு என்பதை மறக்காமல் முதலில் வெற்றிலை பாக்கு கொடுங்கள் என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு வெற்றிலை பாக்கு பூஜைக்கு முக்கிய பொருளாக இருக்கிறது.

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலையை பூஜையில் எப்படி வைத்து படைக்க வேண்டும் என்று பலபேருக்கு குழப்பம் இருக்கிறது. ஆகையால், உங்கள் குழப்பத்தை தீர்க்குமாறு இப்பதிவு உங்களுக்கு அமைப்பும். அதாவது, பூஜையில் வெற்றிலை பாக்கு எப்படி வைத்து படைக்கப்பட வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பூஜையில் வெற்றிலை வைக்கும் முறை:

 how many betel leaves for pooja in tamil

பூஜையில் வெற்றிலை ஆனது, கடவுளை பார்த்தவாறு வைக்க வேண்டும். அதாவது, கடவுளுக்கு வாழை இலை எப்படி வைப்பீர்களோ அதேபோல் தான் வெற்றிலையும் படைக்க வேண்டும். அதாவது, வெற்றிலையின் நுனிப்பகுதி தெற்கு பார்த்தவாறு இருக்கக்கூடாது.

பூஜையில் வெற்றிலையை வைக்கும்போது 4 வெற்றிலையையும் 2 பாக்கினையும் வைப்பது நல்லது. அல்லது இரண்டு வெற்றிலையும் வைக்கலாம். அப்படி நீங்கள் நான்கிற்கும் மேலாக வெற்றிலை வைக்க விரும்பினால் வெற்றிலை கவுளியாக வையுங்கள். அதுவே நீங்கள் துக்க காரியத்திற்கு வெற்றிலையை பயன்படுத்துகிறீர்கள் என்றால் 1 வெற்றிலை 1 பாக்கு மட்டும் வைத்து கொள்ளுங்கள். இதுதான் வழக்கம்.

ஆன்மீகத்தின் படி, இந்த வெற்றிலை பாக்கில் முப்பெரும் தேவிகளும் வாசம் செய்கிறார்கள். அதாவது, வெற்றிலையில் சரஸ்வதி, மஹாலக்ஷ்மி, பார்வதி இருக்கிறார்கள். முப்பெரும் தேவிகள் இருக்கும் அணைத்து இடங்களிலும் முப்பெரும் தேவர்களும் இருப்பார்கள். ஆகையால், அணைத்து தெய்வங்களின் ஆசிர்வாதத்தையும் நீங்கள் பெற விரும்பினால் எப்போதும் பூஜையின் போது வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுங்கள்.

ஏன் அனைத்து சுபகாரியங்களுக்கு வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..?

தேங்காய் வைக்கும் முறை:

பூஜையில் தேங்காய் உடைத்து வைக்கும்போது, தேங்காயின் மேல்பகுதி (கண் உள்ள பகுதி) கடவுளுக்கு வலது பக்கமும், தேங்காயின் அடிப்பகுதி கடவுளுக்கு இடது பக்கமும் வைக்க வேண்டும்.

தண்ணீர் வைக்கும் முறை:

பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி நீங்கள் தினமும் விளகேற்றி வழிப்படும்போது அந்த தண்ணீரை செடிகளில் ஊற்றி மீண்டும் பஞ்ச பாத்திரம் முழுவதும் நிரம்பி இருக்குமாறு நிரப்பி வைக்க வேண்டும்.

திடீர் பணவரவிற்கு வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now