How To Recite Kantha Sashti Kavasam 36 Times In a Day In Tamil
முருகப்பெருமானுக்கு விருப்பமான திருப்புகழை நாம் தினமும் பாராயணம் செய்து வழிபாடு செய்து வந்தால் நமக்கு முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும். அதுவும் முருகனுக்கு பிடித்த கந்த சஷ்டி கவசத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நாம் நினைத்த காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். கந்த சஷ்டி கவசத்தை ஒரு நாளைக்கு 36 தடவை கூறி வழிபட வேண்டும்.
கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். எனவே இன்றைய பதிவில் ஒரு நாளைக்கு 36 தடவை கந்த சஷ்டி கவசத்தை எளிமையாக எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
Kandha Sashti Kavasam Lyrics in Tamil
கந்த சஷ்டி கவசம்:
கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் தீராத கஷ்டங்களும் தீரும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். மேலும் முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் போது உங்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் வந்தால் முருகனே எதாவது ஒரு ரூபத்தில் வந்து உங்களை காப்பாற்றுவார்.
இந்த கந்த சஷ்டி கவசத்தில்,
“ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய
அஷ்டத்திற்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்”
என பால தேவராயன் சுவாமிகள் குறிப்பிட்டுளார். கந்த சஷ்டி கவசத்தை 36 முறை பாராயணம் செய்து விட்டு, திருநீறு அணீந்து முருகனை நினைத்து வணங்கினால் மிகப் பெரிய சக்தி கிடைக்கும் என ஆன்மிக பெரியவர்களால் சொல்லப்படுகிறது.
கந்த சஷ்டி கவசத்தை 36 முறை கூறுவது எப்படி?
கந்த சஷ்டி கவசத்தில் 238 வரிகள் இருக்கிறது. இதை 36 முறை கூறினால் சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் ஆகும். முருகபக்தர்களுக்கு அவ்வளவு நேரம் பாராயணம் செய்ய நேரம் இல்லை என்றால் இதற்கு மாறாக ஒரு வழி இருக்கிறது.
கந்த சஷ்டி கவசத்தில் “ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு” என்கிற வரி இருக்கிறது இந்த வரிக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?
எதிரிகளை வீழ்த்தவும், செவ்வாய் தோஷம் நீங்கவும், ஜாதக தோஷம் நீங்கவும், உடல் ஆரோக்கியம் பெறவும் ஆறுமுகருக்கு சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம். இந்த ஹோமத்தில் பயனப்டுத்தும் மலர்கள் ஆறு, தருக்கள் ஆறு, விதைகள் ஆறு என நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஆறு என்ற எணிக்கையிலேயே இருக்கும். இதையே கந்தசஷ்டி கவசத்தில் பால தேவராய சுவாமிகள் 36 உரு என்று குறிப்பிடுகிறார்.
முருகனின் 36 அட்சரங்கள்:
சரவணபவ
ரவணபவச
வணபவசர
ணபவசரவ
பவசரவண
வசரவணப
என்கிற 36 அட்சரங்களில் ஒவ்வொரு அட்சரத்தையும் 6 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதன் பிறகு கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதன் மூலம் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொன்ன முழு பலனும் கிடைக்கும் என்பதே அர்த்தம். இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும், குழந்தை வரம் கிடைக்கும், முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும்.
குழந்தை வரம்:
குழந்தை இல்லாதவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்தால் உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும். அந்த முருகனே வந்து உங்களுக்கு குழந்தையாக பிறப்பார். முருகனுக்கு உகந்த நட்சத்திரத்தன்று உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |