வீட்டில் எலுமிச்சை பழத்தை பல விதங்களில் வைக்கிறார்களே ஏன் தெரியுமா.?

how to remove negative energy from home in tamil

வீட்டில் எலுமிச்சை பழம் எப்படி வைத்தால் என்ன பலன்கள் என்று தெரியுமா.?

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வீட்டில் எலுமிச்சை பழத்தை பல விதங்களில் வைக்கிறார்கள் அதற்கான பலன்களை தெரிந்து கொள்வோம். இன்று பல வீடுகளில் வாசல்களில் எலுமிச்சை பழத்தை வெட்டி வைக்கிறார்கள். மாலையாக கட்டி வாசலில் தொங்க விடுகிறார்கள். இந்த முறை மக்களிடையே அதிகமாகி விட்டது. ஏன் வைக்கிறார்கள் தெரியுமா.? திருஷ்டி கழியுமா அதனால் வைக்கிறார்கள். இன்னும் பல நன்மைகள் இருக்கிறது. வாங்க தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய இந்த பூவை வீட்டில் வளருங்கள்

எலுமிச்சை பழம் மாலை:

எலுமிச்சை பழம் மாலை

தெய்வங்களுக்கு கனி மாலை சாத்துவோம். அதை எலுமிச்சை மாலை தான் துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு தரிசிக்கும் போது மாலை சாத்துவோம். இந்த தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாத்தி வழிபட்டால் நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் வெற்றி அடையும். இதனால் தான் எலுமிச்சை பழம் மாலையாக கடவுளுக்கு சாத்துகிறார்கள்.

வெற்றி அடைய:

வெற்றி அடைய

சுப நிகழ்ச்சிக்கு போகும் போதும், வெற்றியை அடைவதற்கு செல்லும் போதும் 3 எலுமிச்சைபழத்தை அம்மன் வாசலில் இருக்கும் சூலத்தில் சொருகினால் நீங்கள் செல்லும் காரியம் வெற்றி அடையும்.

கெட்ட சக்தியை விரட்ட:

கெட்ட சக்தியை விரட்ட

தலைவாசலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக  வெட்டி குங்குமம் தடவி வைப்பார்கள். இதனால் கெட்ட சக்திகள் எதுவும்  வீட்டில் நுழையாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிரபஞ்சம் முழுவதும் நல்ல சக்தி மற்றும் கெட்ட சக்தி இரண்டுமே கலந்து தான் நிறைந்து இருக்கின்றன. நமக்கு நல்லது நடக்கும் பொழுது அது நல்ல சக்தியாலும், கெட்டது நடக்கும் பொழுது அதை எதிர்மறை ஆற்றல்களாலும் நடைபெறுகிறது என்பதை நம்மால் உணர முடியும். இந்த எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து நமக்கு நல்ல சக்திகளை கொடுக்கக்கூடிய தன்மை எலுமிச்சை பழத்திற்கு உண்டு. இதனால் தான் எலுமிச்சை பழத்தை வாசலில் வைக்கிறார்கள்.

திருஷ்டி நீங்க:

திருஷ்டி நீங்க

மற்றவர்களின்  பொறாமை மற்றும் பார்வைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழத்துடன் ஒரு துண்டு இரும்பு கம்பி, பச்சை மிளகாய் மற்றும் கரித்துண்டு ஆகியவற்றை சேர்த்து  வாசலுக்கு நடுவே கட்டி தொங்க விடுவார்கள். இது மற்றவர்களுடைய தலையில் படாதபடி இருக்க வேண்டும். இது போல் வாரம் ஒரு முறை மாற்றி வர திருஷ்டி தோஷங்கள் அண்டாது. இப்படி தலை வாசலுக்கும், எலுமிச்சை பழத்திற்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. இதனால் தான் வாசலுக்கு முன் கட்டுகிறார்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்