How To Worship Ayyappa for Ladies in Tamil
ஆன்மீக வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயப்பனின் அருளை பெற பெண்கள், சபரிமலை ஐயப்பன் சுவாமியிக்கு எவ்வாறு விரதம் இருந்து வழிபடுவது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஐயப்பனின் அருளை பெற விரும்பும் பெண்கள் அனைவரும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். சபரிமலைக்கு யாத்திரை செல்ல முடியாத பெண்கள், வீட்டில் இருந்தே ஐயப்பனை வழிபாடு செய்து ஐயப்பனின் அருளை பெறலாம்.
ஐயப்பனின் மீது பக்தி கொண்ட பெண்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு செல்ல முடிவதில்லை. ஏனென்றால் ஐயப்பன் அங்கு பிரம்மச்சரிய விரதத்தினை மேற்கொண்டு இருக்கிறார். அதனால் சபரிமலைக்கு ஆண்கள் மட்டுமே செல்கிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐயப்பனின் அருளை பெற பெண்கள் எப்படி ஐயப்பன் சுவாமியை வழிபட வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?
ஐயப்பனை பெண்கள் வழிபடும் முறை:
ஐயப்பனின் அறுபடை வீடுகள்- சபரிமலை, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா எருமேலி மற்றும் பந்தளம்.
ஐயப்பன் சுவாமி, சபரிமலையில் பிரம்மச்சரியாகவும், மற்ற இடங்களில் குழந்தையாகவும், வேட்டை மன்னனாகவும் ஒரு மனைவி மற்றும் இரு மனைவி என குடும்பத்தஸ்தராகவும் காட்சியளிக்கிறார் ஐயப்பன். இதில், சபரிமலைக்கு மட்டும் குறிப்பிட்ட பெண்கள் போகக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டுள்ளார். மற்ற ஐந்து படை வீடுகளுக்கும் பெண்கள் சென்று ஐயப்பனை வழிபடலாம்.
சபரிமலை ஐயப்பன் சுவாமியை ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல், யார் வேண்டுமானாலும் வழிபடலாம். ஐயப்பனின் அருளை பெற விரும்பும் பெண்கள், ஆண்களை போல் மாலை அணிந்து விரதம் இருக்க முடியாவிட்டாலும், மாலை அணியாமல் அவர்களுடன் சேர்ந்து மண்டல விரதத்தை கடைபிடிக்கலாம். அவர்களுடன் சேர்ந்து சரண கோஷம் சொல்லி, தினமும் ஐயப்பனை வழிபாடு செய்யலாம்.
மாலை அணிந்த ஐயப்ப சுவாமிகள், கன்னி சாமிகள், மாலை அணிந்த குழந்தைகள் ஆகியோருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்யலாம்.
ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டியவற்றை செய்து, ஐயப்பனின் அருளை பெறலாம். விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்ய முடியாத பெண்கள் சபரிமலையை தவிர மற்ற இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று, ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.
ஐயப்ப பக்தர்கள் ஏன் கருப்பு நிறத்தில் மட்டும் ஆடை அணிகிறார்கள் தெரியுமா.? இதுதான் காரணம்.!
கேரளாவில் உள்ள அச்சன்கோவிலுக்கு சென்று, அங்குள்ள ஐயப்பனை தரிசனம் செய்யலாம். சபரிமலையை போன்றே இந்த அச்சன்கோவிலும் 18 படிகள் கடந்து வந்துதான் ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும். இது தவிர எருமேலி தர்ம சாஸ்தா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று பெண்கள் சாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம்.
வீட்டில் உள்ள பெண்கள், சபரிமலை யாத்திரை செல்லும் நேரங்களில் வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டில் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, சபரிமலை யாத்திரை முடிந்து அவர்கள் வீடு திரும்பும் வரை, ஐயப்பன் பூஜையை தொடர வேண்டும். இவ்வாறு பெண்கள் ஐயப்பனை வழிபாடு செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |