How To Write Sri Rama Jayam in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. அனுமனின் மந்திரமான ஸ்ரீ ராமஜெயம் எழுதி அனுமனிடம் வணங்கினால் பல நன்மைகளை பெறலாம். அதனால் தான் ஸ்ரீ ராம ஜெயம் என்பதை 108 முறை எழுதி அனுமனிடம் சமர்ப்பித்து வாங்குவோம். ஆனால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவர்க்கென்று ஒரு முறை இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
நமக்கு ஏற்படும், கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம்.”ஸ்ரீராம ஜெயம்’ என்று எழுதுவதன் மூலம் எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுக்கும். வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி பக்தியை வெளிப்படுத்துவார்கள். இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போரில் ராமன் ஜெயித்து விட்டார் என்பதை சீதாதேவிடம் ஸ்ரீ ராம ஜெயம் என்று ஒரே வார்த்தையில் அனுமன் கூறினார். ஓகே வாருங்கள், ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் முறை எழுதும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ ராம ஜெயம் எப்படி எழுதுவது.?
ஸ்ரீ ராம ஜெயம் என்பதை ஒரு குடும்பம் மொத்தமாக 1008 முறை எழுத வேண்டும். இதில் ஒரு நாளைக்கு 108 முறை எழுத வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்ரீ ராம ஜெயம் என்று எழுதும்போது உச்சரித்துக்கொண்டே எழுத வேண்டும். அப்போது தான் பலன்கள் அதிமாக கிடைக்கும். மேலும், நீல நிற மை கொண்ட பேனாவில் எழுதுவது நல்லது.
ஒரு வெள்ளை காகிதத்தில் ஒரு நாளைக்கு 108 என ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும். 1008 முறை எழுதியதும் அதனை இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி விடுவார்கள் ஆனால், அதனை முறையாக இறைவனிடம் சமர்ப்பிக்க மாட்டார்கள். ஆகையால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் மட்டும் அதனின் நன்மைகள் பெற முடியாது. எழுதிய ஸ்ரீ ராம ஜெயத்தை முறையாக இறைவனிடம் சமர்பிப்பதன் மூலம் மட்டுமே நன்மைகள் பெற முடியும். ஆகையால் ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய பிறகு, அதனை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
மஹா மிருத்யுஞ்சய மந்திரம் வரிகள்..!
ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்.?
ஸ்ரீ ராம ஜெயம் எழுவது மிகப்பெரிய புண்ணிய பரிகாரம் ஆகும். ஸ்ரீ ராம ஜெயம் என்று 108 முறை எழுதி அதனை மாலையாக ஆஞ்சநேயர் கழுத்தில் மாலையாக போடுவதன் மூலம் நீங்கள் வேண்டிய அணைத்து நன்மைகள் நடக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதன் மூலம், நேர்மறை சிந்தனைகள் தோன்றும். ஸ்ரீ ராம ஜெயம் என்று உச்சரித்துக்கொண்டே எழுதும்போது மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலகி நற்குணங்கள் உண்டாகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |