பெண்கள் காலில் மெட்டி அணியும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.! பணக்கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம்.!

Advertisement

மெட்டி அணிதல்

திருமணமான இந்து பெண்களுக்கு மெட்டி அணிவது வழக்கம். ஆரம்ப காலத்தில் திருமணத்தில் மணமகனுக்கு மெட்டியும், மணமகளுக்கு தாலியும் அணிவது வழக்கம். இந்த ஆண் திருமணமானவன் என்பதை உணர்த்தும் வகையில் ஆண்களுக்கு மெட்டியும், இந்த பெண் திருமணமானவள் என்பதை உணர்த்தும் வகையில் பெண்களுக்கு தாலியும் அணிந்து வந்தார்கள். ஆனால் அது காலப்போக்கில் மாறி மெட்டி பெண்களுக்கு உரியதாக ஆகிவிட்டது. பெண்கள் கால் விரலில் மெட்டி அணிவதற்கு ஒரு அறிவியல் காரணம் உள்ளது. எனவே ஆன்மீகத்தின் படி, பெண்கள் மெட்டி அணியும்போது சில முறைகளை கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லாமல் மெட்டி அணியும்போது ஏதேனும் தவறினை செய்தால் வீட்டில் பணக்கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்பு பெண்கள் மறந்தும் கூட இதை செய்யாதீர்கள்

மெட்டி அணியும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்.?

மெட்டி அணிதல்

1.பெண்கள் காலில் மெட்டி அணியும்போது கட்டவிரலுக்கு அருகில் உள்ள விரலில் தான் அணிய வேண்டும். அதற்கு மாறாக, ஸ்டைலிற்காக வேறு விரல்களில் அணிந்தால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இதற்கு ஒரு அறிவியல் காரணமும் உள்ளது. கால் கட்டைவிரலுக்கு அருகில் உள்ள விரலில்தான் கருப்பையின் நரம்பு வந்து முடிவடைகிறது. எனவே இம்மெட்டியினை அந்த விரலில் போட்டு நடப்பதால் கருப்பை வளர்ச்சியடைகிறது. 

எனவே பெண்கள் காலின் கட்டைவிரலுக்கு அருகில் உள்ள விரலில் தான் மெட்டியை அணிய வேண்டும்.

2. காலில் ஒரே ஒரு மெட்டியை மட்டும்தான் அணிய வேண்டும். அப்படி இல்லாமல் மூன்று மெட்டிகளை அணிந்தால் கணவருக்கு நல்லதல்ல. மேலும் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா.

3. சேதமடைந்த மெட்டிகளை பெண்கள் அணிந்திருக்க கூடாது. மெட்டி சேதமடைய தொடங்கியதும் அதனை அகற்றி விட்டு வேறொரு மெட்டியினை அணிதல் வேண்டும். முடிந்தவரை 1 வருடத்திற்கு ஒருமுறையாவது மெட்டியை மாற்றி அணிவது நல்லது.

4. மெட்டியை மாற்றி அணியும்போது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் உங்களுடைய திருமண நாள் ஆகிய நாட்களில் அணியக்கூடாது. வீட்டில் பணக்கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். எனவே இந்நாட்களை தவிர மற்ற நாட்களில் தான் மெட்டியை அணிய வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement