Important Things of Kulatheiva Valipadu in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம்.காம் பதிவின் மூலம் பல ஆன்மிக பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது எந்தெந்த பொருட்களை கட்டாயமாக எடுத்து செல்ல வேண்டும் என்பதனை இப்பதிவில் பார்க்கலாம். குலத்தினை காக்கின்ற தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வம் ஆகும். எமன் கூட ஒருவருடைய குலதெய்வத்தின் அனுமதியை பெற்ற பிறகு தான் அவரின் உயிரை எடுக்க முடியும். அவ்வளவு சக்தி வாய்ந்தது குலதெய்வம். அப்படி இருக்கையில் நாம் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது சில பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்வது மிகவும் அவசியம். அந்த பொருட்கள் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குலதெய்வ கோவிலுக்கு எடுத்து செல்லவேண்டிய முக்கிய பொருட்கள்:
- முற்காலத்தில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள் எவ்வளவோ மாறிவிட்டது. அந்த வகையில் நம் முன்னோர்கள் குலதெய்வத்தினை வழிபட செல்லும் போது சில பொருட்களை கட்டாயமாக எடுத்து சென்று வழிபடுவார்கள்.
- ஏனென்றால் அப்போது தான் நம் குலதெய்வம் மன நிறைவோடும் மகிழ்ச்சியாக நம்மை வரவேற்று ஆசிர்வதிக்கும். அதுபோல தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் தன்னை காண வருகிறார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- குலதெய்வத்தை வழிபட செல்லும் போது வீட்டில் நம் கையால் சமைத்த கட்டு சோற்றினை எடுத்து செல்லவேண்டும். இதனை நாம் உண்பதற்கு முன் கட்டு சோற்றிலிருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு சோற்றினை எடுத்து குலதெய்வத்திற்கு படைக்க வேண்டும்.
- அப்படி செய்தால், நம் குலதெய்வம் பறவை வடிவிலோ அல்லது ஈ, எறும்பு போன்ற வடிவிலோ சாப்பிட்டு மகிழ்ச்சி அடையும் என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடம் இருந்தது.
- எனவே குலதெய்வத்தை வழிபட செல்லும் போது நம் கையால் வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்து செல்ல வேண்டும்.
- அதுமட்டுமில்லாமல், வீட்டிலே மாவிளக்கு மாவு செய்து, குலதெய்வத்தை வழிபட செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும். நம் செய்த இந்த மாவில் விளக்கேற்றி வழிபடும் போது நம் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நம்மை மகிழ்ச்சியாக வைக்கும்.
- குலதெய்வக் கோவிலுக்கு செல்லும் போது குறைந்தபட்சம் 1 கிலோ வெல்லத்தினை வாங்கி வீட்டில் வைத்து பிறகு அதனை எடுத்து செல்லவேண்டும்.
எனவே நீங்கள் மேலே கூறியுள்ள கட்டுசோறு, மாவிளக்கு மற்றும் வெல்லம் போன்றவற்றை தவறாமல் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது எடுத்து செல்ல வேண்டும்.
இந்த மூன்று பொருட்களை கொண்டு வழிபட்ட பிறகு, நீங்கள் குலதெய்வத்திற்கு ஆடு வெட்டுதல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளை செய்யலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |