Irandavathu Thirumanam Kanavu Palangal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை கொடுத்துள்ளோம். பொதுவாக நமக்கு வரும் பல்வேறு விதமான கனவுகள் வரும். அப்படி நமக்கு வரும், ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும். ஆனால், நம்மில் பலருக்கும் நாம் கண்ட கனவிற்கான அர்த்தம் என்ன என்பது தெரிந்திருக்காது. ஆனால், அதனை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்போம்.
அந்த வகையில் நீங்கள் இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டு அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்..
இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:

இரண்டாவது திருமணம் நடப்பது போல் கனவு காண்பது பலவிதமான அர்த்தங்களை குறிக்கிறது. அவை பின்வருமாறு:
- நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆகி இருந்து மீண்டும் உங்களுக்கு இரண்டாவது திருமணம் நடப்பதுபோல் கனவு கண்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படபோவதை குறிக்கிறது.
- கனவு காண்பவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இன்னொரு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
- நீங்க உங்கள் வாழ்வில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும், சில நேரங்களில் அதிருப்தியாக உணரவிருப்பதையும் குறிக்கிறது. மேலும், நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் அறிவுறுத்துகிறது.
- நீங்கள் ஒரு காலத்தில் விரும்பிய ஒன்றை விட்டுவிட இருப்பதையும் குறிக்கிறது. நீங்கள் செய்யும் காரியங்களை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பதை யும் உங்கள் வேலைகளை திறம்பட செய்து முடிக்க வேண்டியும் அறிவுறுத்துகிறது.
- எதிர்பாராமல் வரவிற்கும் செய்தியை எண்ணி நீங்கள் கவலை அடைய உள்ளதை உணர்த்துகிறது.
- நீங்கள் தெளிவான பாதையில் உங்கள் வாழ்க்கையாய் தொடர இருப்பதையும், உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதை உணர்த்தியும், சிலருக்கு நீங்கள் சில பரிசுகளை வழங்க இருப்பதையும் உணர்த்துகிறது.
- நீங்கள் சில முக்கியமான செயல்களை செய்து முடிக்க இருப்பதையும், பயணம் மேற்கொள்வதில் தடைகள் வர இருப்பதையும் குறிக்கிறது.
- சிலர் உங்களின் நேர்மையான குணத்தை அவமானபடுத்த இருப்பதையும் குறிக்கிறது.
உங்கள் வாழ்க்கைத்துணையை மீண்டும் இரண்டாவதாக திருமணம் செய்வது போல் கணவு கண்டால் என்ன பலன்:
- தன் வாழ்க்கை துணையை மறுபடியும் திருமணம் செய்வதுபோல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஏதோ தவறு செய்ய இருப்பதையும், அது பாவமாக வாழ்வில் வலுவாக இருக்க போவதையும், இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக நடக்க இருப்பதையும், உங்களை சுற்றியுள்ளவர்கள் ஏதோ காரணத்திற்காக உங்களை விட்டு விலக இருப்பதையும் குறிக்கிறது.
- மேலும், உங்கள் துணையுடன் உள்ள கருத்து வேறுபாட்டை நீக்கி, ஒற்றுமையாக அன்புடன் வாழ கனவு அறிவுறுத்துகிறது.
கணவருக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கணவருக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்பது நல்லதல்ல. இந்த மாதிரி கனவு காணும் போது நீங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு கெட்ட செய்திகள் வரக்கூடும். அதனால் இந்த நேரத்தில் எந்த செயல் செய்தாலும் அதனை ஒரு முறைக்கு பல யோசித்து செயல்படுங்கள். உங்களின் கணவருக்கும் உங்களுக்கும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












