Method of Worship in Tamil | Iranthavarkalai Valipadum Murai
நம்மை இந்த உலகிற்கு அறிமுகபடுத்தியவர்கள் நம் முன்னோர்கள் தான். ஆகையால், நம் முன்னோர்களை வழிபடுவது மிகவும் அவசியம். அவர்களின் ஆசி இருந்தால் தான் குடும்பம் தழைக்கும் என்றும் கூறுவார்கள். பொதுவாக, ஒவ்வொரு வீட்டிலும் முன்னோர்களின் உருவ படத்தை வைத்து வழிபட்டு வருவார்கள். ஆனால், ஒரு சில வீடுகளில் முன்னோர்களின் உருவ படத்தை எங்கு வைக்க வேண்டும்.? எந்த திசையில் வைக்க வேண்டும்.? மற்றும் எப்படி வழிபட வேண்டும் என்றும் குழப்பத்தில் இருப்பார்கள். ஆகவே, அப்படி குழப்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இறந்தவர்களை வழிப்படுவது, இறந்தவர் மீதான அன்பையும் மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், அவர்களின் ஆசியை பெற்று மகிழ்ச்சியான வாழ்வை வாழவும் வழிவகுக்கிறது. ஆகையால், இறந்தவர்களை வழிபாடும் முறை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
இறந்தவர்களை வழிபடும் முறை:
இறந்தவர்கள் படத்தை பூஜை அறையில் வைக்காமல், வீட்டின் வடக்கு சுவற்றில் மாற்றி தெற்கு பார்த்து வைக்குமாறு வைத்து வழிபட வேண்டும். அதாவது, இறந்தவர்களின் பார்வை தெற்கு நோக்கி இருக்குமாறு அவர்களின் படத்தை வைக்க வேண்டும்.
இறந்தவர்களை வழிபடுவதற்கென்று தனி விளக்கை வாங்கி வைத்து கொள்ளுங்கள். கடவுளுக்கு ஏற்றும் விளக்கை இறந்தவர்களை வணங்குவதற்க்கு பயன்படுத்த கூடாது. இறந்தவர்களின் படங்களுக்கு முன்னால் தினமும் செம்பு நிறைய தண்ணீர் வையுங்கள்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
தினமும் இறந்தவர்களின் படத்தின் முன்னால் பூக்கள், கற்பூரம், ஊதுபத்தி போன்றவற்றை வைத்து விளக்கேற்றி வழிபட்டு வரலாம். முக்கியமாக, அமாவாசை போன்ற நாட்களில் இறந்தவர்களை வணங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இறந்தவர்களுக்கு வணங்கி அவர்களுக்கு உணவளிக்கும் விதமாக காகத்திற்கு சோறு வைக்கலாம். அன்றைய நாளே அவர்கள் பித்துருலோகத்திலிருந்து நம்மை தேடி வந்து நம் குடும்பத்தை ஆசிர்வதிப்பார்கள்.
ஒரு சிலருக்கு இறந்தவர்களின் திதி நாள் தெரியாமல் இருக்கம். அப்படி இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை தினத்தன்று விரதமிருந்து தர்ப்பணம் செய்து வரலாம். இவ்வாறு வழிபடுவதால் முன்னோர்களின் முழு ஆசியும் கிடைக்கும்.
முருக பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |