இறப்பு தீட்டு எத்தனை நாள்
தீட்டு என்ற வார்த்தைக்கு எல்லாருக்கும் அர்த்தம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு முறை கூறுகிறேன். தீட்டு என்பது தீண்டத்தகாததை குறிக்கிறது. ஒருவர் இறந்த தீட்டு, குழந்தை பிறந்த தீட்டு, கன்னி தீட்டு என்று பல வகைப்படும். இந்த தீட்டுகள் ஆனது எதெல்லாம் தீட்டுகள், எத்தனை நாள் தீட்டுகள் என்று பல கேள்விகள் இருக்கும். அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் இறப்பு தீட்டு எத்தனை நாள் என்று அறிந்து கொள்வோம் வாங்க.
இறப்பு தீட்டு எத்தனை நாள்:
ஒரு வீட்டில் ஒருவர் இறந்து போனால் அந்த வீட்டிற்கு தீட்டு என்பது 16 நாட்கள் ஆகும். இந்த 16-வது நாளில் ஆற்றில் பிண்டங்களை கழித்து, வீட்டில் கோமியம் தெளித்து தீட்டை கழித்து விடுவார்கள். இந்த நாள் கழிந்தாலே வீட்டில் தீட்டு கழிந்து விட்டது என்று அர்த்தம்.
சிலரது வீட்டில் 12-ம் நாள் காரியம் செய்வார்கள். அப்படி செய்தாலும் அவர்களுக்கு 12 நாட்களில் தீட்டு கழிந்து விட்டது.
இந்த காரியம் செய்து முடித்த பிறகு கோவிலுக்கு தாராளமாக செல்லலாம். அர்ச்சனை, பூஜை செய்யலாம். ஆனால் குலதெய்வ கோவிலுக்கு மட்டும் செல்ல கூடாது. குலதெய்வ கோவிலுக்கு எந்த பூஜை மற்றும் அர்ச்சனையும் செய்ய கூடாது.
குழந்தை பிறந்த தீட்டு எத்தனை நாள்:
பிறப்பு தீட்டு என்பது ஒருவர் வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்றால் அதனை தான் பிறப்பு தீட்டு என்கிறோம். இந்த தீட்டு ஆனது 16 நாட்கள் ஆகும். இந்த 16-வது நாளில் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி வைப்பார்கள். சிலரது வீட்டில் 22-வது நாள் பெயர் வைக்கும் நிகழ்ச்சி வைப்பார்கள். இப்படி வைத்தாலும் பிறப்பு தீட்டு கழிந்து விடும்.
அம்மா அப்பா அல்லது அண்ணன் தம்பி இறந்தால்:

அம்மா அப்பா மற்றும் அண்ணன் தம்பி இறந்தால் 16 நாட்கள் தான். காரியம் முடிந்த பிறகு தீட்டு கழிந்து விடும். ஆனால் ஒரு வருடம் வரைக்கும் குலதெய்வ கோவிலுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய கூடாது. மற்ற கோவில்களுக்கு அர்ச்சனை செய்யலாம், பூஜை செய்யலாம் இதனை எந்த தவறும் இல்லை.
மகளுக்கு தீட்டு எத்தனை நாள்:
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை கொண்ட ஒரு குடும்பத்தில் யாரவது ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தில் உள்ள மகளுக்கு தீட்டு உள்ளதா என்ற பெரிய சந்தேகம் இருக்கும். இந்த மகளானவள் அந்த வீட்டிலேயே அதாவது திருமணம் ஆகாமல் இறந்தால் மட்டும் தான் தீட்டு இருக்கிறது. அப்படி திருமணம் ஆகாமல் இருந்தால் 16 நாட்கள் தீட்டு இருக்கிறது. இந்த 16 நாட்கள் அதாவது காரியம் முடிந்த பிறகு குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். மற்ற கோவில்களுக்கு செல்லலாம். அதுவே திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று விட்டார் என்றால் அவர்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே தீட்டு இருக்கிறது. விருப்பட்டவர்கள் 16 நாட்களும் அசைவம் சாப்பிடாமல் தன்னுடைய பெற்றோர்களுக்காக இருப்பார்கள்.
தீட்டின் விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













