வீட்டை விட்டு செல்லும் பொழுது கால் இடறுவது நல்லதா ?

is it good or bad to stumble when going outside

வெளியில் செல்லும் பொழுது கால் இடறுவது நல்லதா கெட்டதா ?

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக பலரிடம் சகுனம் பார்க்கும் பழக்கம் இன்றளவும் இருக்கிறது. அந்த வகையில் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கால் இடறுவது அல்லது கால் தடுக்குவது நல்லதா? கெட்டதா? என்று பலருக்கு தெரிவதில்லை. அது குறித்த விஷயத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பொதுவாக ஜோதிடம் சாஸ்த்திரம் படி ஜாதகத்தின் கால புருஷனின் லக்னம் மேஷம் ஆகும். அதன் அதிபதி செவ்வாய் ஆகும், அதன் ஏழாம் விடும் துலாம், அதன் அதிபதி சுக்கிரன். இதன் ராசிகள் ஒன்றுக்கு ஒன்று ஏழாம் வீடாக வருவதால் சுபத்தன்மைகள் நிறைந்தவை என்று சொல்லப்படுகிறது. சுக்கிரனின் காரகத்துவம் உள்ள அனைத்து பொருட்களுமே சுபத்தன்மை நிறைந்த சகுனம் ஆகும்.  அதேபோல் கால தேவனின் பாதக அதிபதி சனிபகவான் ஆவர். ஆக சனி சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்துமே அசுபத்தமையுடையவை ஆகும்.

சிலர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பலவிதமான சகுனங்களை பார்ப்பதும் உண்டு நாம் பார்க்கும் சகுனங்களை பொறுத்து நமக்கு நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அமையும் என சகுன சாஸ்த்திரம் முறை படி மக்கள் நம்புகிறார்கள். ஒரு சிலருக்கு மோசமான சகுனம் தென்பட்டால் அவர்கள் எந்த பயணமாக இருந்தாலும் வெளியில் செல்ல மாட்டார்கள். மிக முக்கியமான பயணமாக இருந்தால் வீட்டிற்கு வந்து அதற்கான ஒரு சில பரிகாரங்களை செய்த பிறகே திரும்ப அந்த பயணத்தை மேற்கொள்வார்கள். இத்தகைய சகுனங்களில் ஒன்று தான் வீட்டை விட்டு செல்லும் பொழுது கால் இடறுவது இந்த சகுனம் நல்லதா? கெட்டதா? என்பதை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

வீட்டை விட்டு செல்லும் பொழுது கால் இடறுவது நல்லதா?

நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது நம்முடைய வலது கால் அல்லது இடது கால் இடறினால் அதற்கு பல நல்ல கெட்ட விஷயங்கள் சொல்லப்படுகிறது.

வீட்டை விட்டு கிளம்பி வெளியில் செல்லும் பொழுது உங்களுடைய இடது கால் இடறினால் அது நல்லது என சொல்கிறார்கள். உங்களுடைய இடது கால் இடறினாலோ அல்லது ஏதாவது ஒரு பொருள் மீது தட்டினாலோ நீங்கள் செல்லக்கூடிய காரியம் நல்லவிதமாக முடியும் என அர்த்தம்.

அதே சமயத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுது வலது கால் இடறினால் அது நல்லது அல்ல என சொல்கிறார்கள். இது நீங்கள் செல்லும் விஷயங்களில் தடங்கலை ஏற்படுத்தும் என சொல்கிறார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்