பொங்கல் எந்த திசையில் பொங்க வேண்டும்! | Pongal Pongum Thisai Palangal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்.? எந்த பொங்கல் முதலில் பொங்குவது நல்லது.? எனபதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. நம் முன்னோர்கள் பொங்கல் எந்த திசையில் பொங்கல் வேண்டும்.? அப்படி பொங்கல் பொங்கும் திசையை வைத்து இந்த வருடம் எப்படி இருக்கும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
தை திருநாள் அன்று அனைவரின் வீடும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்..! அதேபோல் வீடே புகை மண்டமாக இருக்கும். ஏனென்றால் வீட்டில் உள்பக்கம் தான் சிலர் வீட்டில் பொங்கல் வைப்பார்கள் அதனால் அடுப்பு எறிவது புகை மூட்டமாக இருக்கும். அதிலும் சிலர் பானையை ஊற்று கவனித்து கொண்டு இருப்பார்கள். எந்த பொங்கல் முதலில் பொங்கவேண்டும், அது எந்த திசையில் பொங்குகிறது என்று கவனித்துக்கொண்டு இருப்பார்கள், சிலருக்கு இப்படி ஒரு சாத்திரம் உள்ளது என்று தெரியாது. இந்த வருடம் பொங்கல் வைத்தால் அதனை கவனித்து என்ன பொங்கல் என்ன பலன் என்று தெரிந்துகொள்ளுங்கள்..!
பொங்கல் அன்று இந்த மூன்று பொருட்களை வாங்கி விடுங்கள் அது உங்கள் வீட்டில் பண வரவை அதிகரிக்கும்..!
எந்த பொங்கல் முதலில் பொங்க வேண்டும்:
பொதுவாக பொங்கல் வைக்க பானையை அலகாரம் செய்து, அதற்கு பூ போட்டு வைத்து இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி, மஞ்சள், குங்குமம் வைத்து பானையை அலகாரம் செய்து. அடுப்பில் பானையை வைத்து அதில் சூடம் ஏற்றி அடுப்பை பற்றவைத்து பொங்கல் பொங்க ஆரம்பித்து விடுவார்கள்
அதில் முதலில் பால் தான் ஊர்வார்கள் அந்த பால் முதலில் எந்த திசையில் பொங்குகிறதோ அதற்கு ஏற்றது போல் பலன் இருக்கும்..!
அனைவரும் சொல்வார்கள் சர்க்கரை பொங்கல் பொங்கினால் நல்லது என்று ஆனால் இது முற்றிலும் தவறு இரண்டு பொங்களில் எது பொங்கினாலும் நன்மை தான். ஆகவே அதனை நினைத்து யாரும் பயம்கொள்ளவேண்டும்.பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது:
வடக்கு:
வடக்கு திசையை பார்த்து இரண்டு பொங்களில் எது பொங்கினாலும் பணவரவு உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பணவரவு உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.
தெற்கு:
தெற்கு திசையை பார்த்து பொங்கல் பொங்கினால் செலவுகள் அதிகரிக்கும். அதாவது பிணி உண்டாகும் என்பது அர்த்தமாகும். அந்த வருடம் முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அடிக்கடி சரியில்லாமல் போகும்.
கிழக்கு:
கிழக்கு திசையை பார்த்து பொங்கல் பொங்கினால் செல்வச்செழிப்பு உண்டாகும். வீடு, மனை, வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு வரும்.
மேற்கு:
மேற்கு திசையை பார்த்து பொங்கல் பொங்கினால் சுபகாரியம் இனிதே தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வரன் இந்த வருடத்தில் கைகூடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும், சுபச்செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதை குறிக்கிறது.
தைப் பொங்கல் அன்று மறக்காமல் நாம் செய்ய வேண்டியவை என்ன தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |