Iyyappan Padalgal Tamil Lyrics
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்…! அதாவது தமிழ் வருடத்தில் வரக்கூடிய கார்த்திகை மாதம் வந்தாலோ போதும் அனைவரும் அவர் அவருக்கு பிடித்த தெய்வங்களிடம் வேண்டுதல் வைத்து மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இடிமுடிக்கட்டி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. இதன் படி பார்த்தால் குறிப்பாக பெரும்பாலான ஆண்கள் கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் எடுத்து செல்வார்கள்.
இவ்வாறு மாலை அணிந்து இருக்கும் போது மற்ற தினங்களை காட்டிலும், அதிகமாக சுத்தமாகவும், தெய்வீக பக்தியுடனும் இருப்பார்கள். அதோடு மட்டும் இல்லாமல் விடியற்காலை 4 மணிக்கு குளித்து பூஜை செய்து ஐயப்பனுக்கு பாடல்களை பாடுவார்கள். இத்தகைய முறை மாலை பொழுதிலும் நடக்கும். ஆகவே இன்று ஐயப்பன் பக்தருக்கான காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா என்ற பாடல் வரிகளை பார்க்கலாம் வாங்க..!
முருகனின் புகழ் கூறும் அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்.
காடு மலை கடந்து வந்தோம் ஐயப்பா:
காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா
காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய- ஐயப்பா
வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி
வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா- ஐயப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே
ஏட்டினிலே எழுத வைத்தாய் ஐயப்பா எங்கள்
பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள்
பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீ
ஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா
காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா
நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த ஐயப்பா
பாலகனாய் அவதரித்த ஐயப்பா
வேலவனின் அருமைத் தம்பி காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை ஏறிவந்தோம் ஐயப்பா
காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா
மணிகண்டா உன் கருணை அமுதமப்பா உன்
புன்னகையில் புவனமெல்லாம் மயங்குதப்பா
மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா
மின்னும் காந்தமலையில் ஜோதி தெரியுதப்பா
சபரி மன்னவனே உன் மகிமை புரியுதப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே
காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா..!
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா..!
மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |