ஜனனி ஜனனி பாடல் வரிகள்
பொதுவாக காலையும், மாலையும் பக்தி பாடல்களை தொலைக்காட்சியிலோ, ரேடியோவிலோ ஓட விடுவார்கள் இதனை சாதமாகவும் வைப்பார்கள். காரணம் வீடு முழுவதும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வைப்பார்கள். நம் வீட்டில் எப்பொழுதும் மகாலட்சுமி வாசம் செய்வாள். சில நபர்கள் பாடல் ஓடி கொண்டே இருக்கும் போதே தானும் பாடலை பாடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஜனனி ஜனனி பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
ஜனனி ஜனனி பாடல் வரிகள்:
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்….
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே …
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே…
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
சக்தி பீடமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
முழுமுதற் கடவுளான விநாயகரின் கவச வரிகள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |