குருவின் வக்ர பெயர்ச்சி
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடியவர். எந்த கிரகத்திற்கும் இல்லாத தனி சிறப்பு குரு பகவானின் பார்வைக்கு உண்டு. ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குருவின் பார்வை இருந்தால் நற்பலன்கள் உண்டாகும். இதனால் தான் “குரு பார்க்க கோடி நன்மை” என்று கூறுவார்கள். குரு பகவானை புத்திர காரகன், தன காரகன் மற்றும் ஜீவன காரகன் என்றெல்லாம் அழைப்பார்கள்.
இத்தகைய சிறப்பினை பெற்ற குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு சஞ்சரிக்கக்கூடியர். தற்போது, குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அதனை தொடர்ந்து, அக்டோபர் 09 ஆம் தேதி முதல் ரிஷப ராசியிலேயே பின்னோக்கி நகரும் வக்ர பெயர்ச்சியை மேற்கொள்ள இருக்கிறார். 2025 ஆண்டு பிப்ரவரி 04 ஆம் தேதி வரை வகர நிலையில் இருப்பார். குரு வக்ர பெயர்ச்சியில் இருக்கும் இக்காலத்தில், 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டமான பலன்களை அளிக்க உள்ளார். எனவே, குருவின் வக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் அப்டித்து தெரிந்து கொள்ளலாம்.
Jupiter Retrograde 2024 Effects on Zodiac Signs in Tamil:
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். அனைத்து செயல்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சேமிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். மேலும், அஷ்டம சனியின் பார்வை புரியும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசியில் தான் குருவின் வக்ர பெயர்ச்சி நடக்கிறது. இதனால், அனைத்து வகையிலும் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். குருவின் பெயர்ச்சியால் முன்னேற்றம் உண்டாகும். ரிஷப ராசிகாரர்களுக்கு இக்காலத்தில் எல்லாவற்றிக்கும் குரு உதவியாக இருப்பார்.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சியானது பல வகையிலும் நற்பலன்களை அளிக்கும். வேலை செய்வபர்களுக்கு வெற்றி கிடைக்கும் காலம். உங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். முன்பாக செய்த முதலீடுகள் இக்காலத்தில் லாபத்தை கொடுக்கும். நீண்ட நாட்களாக பிறர் கையில் சிக்கியிருந்த பணம் தற்போது உங்கள் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டமான சூழ்நிலை ஏற்படும். இக்காலத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. நிதிநிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். எனவே, அனைத்து வகையிலும் முன்னேற்றம் உண்டாகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |