குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குரு பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடம் வரை அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு 2025 குருபெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்நாளில் குருபகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். தற்போது, குருபகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
அதற்கு அடுத்து 2025 மே 14 ஆம் தேதி தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். குருவின் இந்த பெயர்ச்சி 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்தும். அவற்றில் நான்கு ராசிகளுக்கு மட்டும் செல்வம், மகிழ்ச்சி, மரியாதை, புகழ் என பலவிதத்தில் நன்மை மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகப்போகிறது. எனவே, அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Jupiter Transit in Gemini 2025 These Zodiac Sign are Very Lucky in Tamil:
துலாம்:
குருவின் இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் அளிக்கும் வகையில் இருக்கும். அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை மட்டுமே உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவும் அதிர்ஷ்டமும் உண்டாகும். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். இதனால் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறுவீர்கள். நீங்கள் வாங்க விரும்பிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு:
குரு பகவான் தனுசு ராசியின் சம சப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைய உள்ளார். இது தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை அளிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் அணைத்தும் கிடைக்கும். இதுவரை திருமண முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் திருமண வரன் கைகூடி வரும் அல்லது திருமணம் சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குருவின் பெயர்ச்சி காரணமாக பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆக அனைத்து விதத்திலும் குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மையை அளிக்கும்.
ரிஷபம்:
குருவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை அளிக்கும். ரிஷப ராசிக்கு தன அதிபதியான குரு பகவான், தன ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் உண்டாகும். இதுவரை இல்லாத அளவிற்கு உங்கள் சேமிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். இக்காலத்தில் நீங்கள் செய்யும் முதலீடு நல்ல லாபத்தை அளிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு ஏழரை சனி நடந்தாலும், குருவின் அருளால் நிம்மதியும், பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காவிட்டாலும் இது போதும் என்ற திருப்தி கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் உங்கள் திறமை அதிகரிக்கும். நீங்கள் இதுவரை செய்த முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |