குருபகவான் திருவாதிரை நட்சத்திர பெயர்ச்சி 2025
கிரங்களில் குரு பகவான் முக்கியமாக கிரகமாக இருக்கிறார். இவர் மெதுவாக பெயர்ச்சி அடைய கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 14-ம் தேதி குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். இந்த பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்கள் சாதகமான பலனை பெற போகிறார்கள். சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனை வரப்போகிறது. இந்த பதிவில் குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்க போகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
துலாம்:
துலா ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சி ஆனது சிறப்பான பலனை தரப்போகிறது. இவர்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து நலன் தொகை கிடைக்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை ஆனது நீங்கும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை நீங்கும். அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு சக பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
புதன் அஸ்தமனத்தால் கஷ்டத்தை சந்திக்க போகும் ராசிகள்
ரிஷபம்:
குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி ஆனது ரிஷப ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலனை கொடுக்க போகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால் அவை நீங்கும். சட்ட வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய எல்லா செயல்களுக்கும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் ஆனது அதிகரிக்கும். உங்களுடைய பண வரவு ஆனது அதிகரிக்கும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சி ஆனது எல்லா விதத்திலும் நேர்மையான பலனை தரும். இந்த நேரத்தில் உங்களின் வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும் .நீங்க செய்ய கூடிய எல்லா செயல்களிலும் வெற்றியை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு மற்றும் அங்கீகாரம் ஆனது அதிகரிக்கும். வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். புதிதாக திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை ஆனது சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













