வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்..!

Updated On: February 12, 2025 12:38 PM
Follow Us:
Kaaliyamman Kanavil Vanthal
---Advertisement---
Advertisement

Kaaliyamman Kanavil Vanthal

நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில் மனிதனாக பிறக்கும் அனைவருக்குமே கனவு என்பது கண்டிப்பாக வந்திருக்கும். கனவு என்பது பொதுவாக தூக்கத்தில் தான் வரும், அவ்வாறு வரும் கனவானது, நல்ல கனவா அல்லது கெட்ட கனவா என்று அவரவர் கனவை பொறுத்தது.

பெரும்பாலானவர்கள் தெய்வங்களை கனவில் காண்பார்கள், சிலர் சாமி சிலைகளை கனவில் காண்பார்கள் இது போன்று உங்கள் கனவில் காளியம்மன் வந்திருந்தால் அதற்கு என்ன பலன் உங்களுக்கு தெரியுமா? ஒருவேளை உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்..!

காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்?

காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்

உங்கள் கனவில் காளியம்மன் வந்தால் நீங்கள் அதனை நினைத்து பயப்பட தேவை இல்லை. இது ஒரு நல்ல கனவு தான், காளியம்மன் உங்களுடைய கனவில் வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய நீங்கள் சிறப்பாக செயப்பட வேண்டும், இவ்வாறு சிறப்பாக செயல்பட்டால் அந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியேறி வந்துவிடலாம். ஆக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காவே காளியம்மன் உங்கள் கனவில் காட்சி தருகிறார்.

காளியம்மன் தன்னுடைய பக்தர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் பாதிப்பு ஏற்பட கூடாது என்று நினைக்கக்கூடிய கடவுளாக இருக்கிறார். ஆக அவர்கள் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வருவதற்கு முன்பே அதில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு கனவுகள் மூலம் வந்து உணர்த்துகிறார்கள். எந்த ஒரு கடவுள் கனவில் வந்தாலும் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.

காளி தேவி கனவில் வந்தால்:

காளி தேவி முழு உருவம் கனவில் வந்தால் உங்களின் கிரக சூழ்நிலை இப்போதைக்கு சரியில்லை என்று அர்த்தம். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் அல்லது உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படும்.

அது மட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் அங்கேயும் சில பிரச்சனைகள் ஏற்படும் அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.உங்கள் குடும்பத்தினரும் மற்றும் உங்கள் நண்பர்களும் உங்களுக்கு துன்பத்தினை கொடுப்பார்கள்.

காளி திரிசூலம் கனவில் வந்தால்:

காளிதேவி திரிசூலம் கனவில் வந்தால் கனவு காண்பவர் உங்கள் எதிரிகளிடமிருந்து இதனால் வரை வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் லாபம் பெற்று வாழ்வில் முன்னேறுவீர்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கீழே விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now