கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்

Advertisement

கடக ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

குழந்தைகள் பிறந்ததுமே அவர்களுக்கான ராசி நட்சத்திரத்தை கணிப்பார்கள். அதோடு மட்டுமில்லாமல் அந்த ராசிக்கான கடவுள் யார் என்று கூறுவார்கள். அந்த கடவுளுக்கு தத்து கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். அதனை நாமும் செய்திருப்போம். இப்படி அவர்களின் கடவுளுக்கு தத்து கொடுப்பதால் அவர்களின் வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் அவர் பார்த்து கொள்வார் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அது போல் உங்களுக்கு ஏதும் கஷ்டம் ஏதும் நேர்ந்தால் அவர்களுடைய கடவுளிடம் வழிபடும் போது அந்த கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கடக ராசிக்குரிய கடவுள்:

கடக ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

கடக ராசிக்காரர்கள் புனர்பூசம் மற்றும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசியின் அதிபதியாக இருப்பது சந்திரன். இந்த ராசிக்காரர்கள் கும்பகோணம் அருகே உள்ள கற்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் உங்களின் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெறுவீர்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அடுத்து இருக்கும் திருவிடைமருதூர் தாலுக்காவில் இருக்கும் திருந்துதேவன்குடி என்ற சிறிய கிராமத்தில் கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்த ஊரின் சுற்றி உள்ளவர்கள் நண்டாங்கோயில் என்று அழைப்பார்கள்.

மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்

இந்த கோவிலில் மூலவர் இரண்டு அம்பாளுடன் காட்சி தருகிறார். இதில் விநாயகரும் இருக்கிறார், இவரை கற்கடக விநாயகர் என்று அலைகிறார்கள். தேவாரம் பால் பெற்ற 276 சிவ தளங்களில் 96-வது தலமாக இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை போன்ற நாட்களில் இந்த கோவிலில் விசேஷமாக இருக்கும். மேலும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 4 – 7  மணி வரை நடை திறந்திருக்கும்.

கோவிலுக்கு வழி:

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் திருவிசநல்லூர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில் திருந்துதேவன்குடி இருக்கிறது. இங்கிருந்து திருவிசநல்லூர் செல்வதற்கு கோவிலுக்கு பேருந்து வசதி இருக்கிறது. திருவிசநல்லூலிருந்து நடந்தோ அல்லது  ஆட்டோ பிடித்து செல்லலாம்.

கோவில் முகவரி:

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்

நண்டாங்கோவில்

திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல்,

கும்பகோணம் வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் – 612 105

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement