கடக ராசி பூசம் நட்சத்திரம் வாழ்க்கை பலன்கள் எப்படி இருக்கும்..!

கடக ராசி பூசம் நட்சத்திரம்

கடக ராசி பூசம் நட்சத்திரம் வாழ்க்கை பலன்கள்..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய ஆன்மீகம் பதிவில் கடக ராசி பூச நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்… அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

கடக ராசி பூசம் நட்சத்திரம் குணங்கள்:

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடவுள் மீது அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பாராட்டுக்களுக்கு மயங்கும் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களிடம் இனிமையாக பேசி எந்த காரியத்தையும் சாதித்து விடலாம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் துலாம் ராசி குணங்கள்

ஆன்மீகத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வைக் காணும் வரை ஓயமாட்டார்கள். பூசம் நட்சத்திரகாரர்கள் மனசாட்சிக்கு பயந்து நடக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எந்த ஒரு காரியத்தையும் வெற்றியுடன் செய்து முடிப்பார்கள். பூசம் நட்சத்திரக்காரர்கள் அதிகம் தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்களிடத்தில் பண்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பூசம் நட்சத்திரம் கல்வி மற்றும் தொழில் எப்படி இருக்கும்: 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் அதிகம் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில்அதிகம் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளமை காலத்தில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் அதன் பின் நன்றாக சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அனைத்து திறமைகளும் இவர்களுக்கு உண்டு.

கன்னி ராசியின் பொது பலன்கள் மற்றும் குணங்கள்

பூசம் நட்சத்திரம் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்: 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் அதிகம் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார்கள். காதலித்தவர்களையே திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் இவர்களுக்கு உண்டு.

பூசம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்: 

பூசம் நட்சத்திரத்தத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை துணையை அதிகளவு நேசிப்பார்கள். திருமணத்திற்கு பிறகு துணையின்  சொல்படி கேட்டு நடப்பார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை துணையுடன் ஆனந்தமாய் வாழ்வார்கள். கூட்டு குடும்பமாக வாழவேண்டும் என்று ஆசைபடுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். குழந்தைகளின் வளர்ச்சி இவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை:

அதிர்ஷ்டக் கிழமைகள்: சனிக்கிழமை

அதிர்ஷ்ட விருட்சம் : அரச மரம்

அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள் : 8

அதிர்ஷ்ட ரத்தினம் : முத்து

அதிர்ஷ்ட உலோகம்: இரும்பு

அதிர்ஷ்ட பறவை : கடற் காகம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்