தீராத கடனை அடைக்க எலுமிச்சை பழத்தை கையில் வைத்தாலே போதுமா.!

kadan adaiya elumichai parikaram

கடனை அடைக்க எலுமிச்சை பழம்

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது அத்திவாசிய ஒன்றாக இருக்கிறது. இதற்காக கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் பணத்தை சம்பாதித்தாலும் அதை ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் ஏராளாமனோர் இருக்கிறார்கள். அது போல பணத்தை தேவை அதிகமாக இருப்பதால் வாங்குகிற சம்பளம் பத்தாமல் கடன் வாங்குகிறார்கள். ஆனால் அந்த கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். கடனை பிரச்சனை தாங்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் கடனை அடைப்பதற்கு எலுமிச்சை பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

கடனை அடைக்க எலுமிச்சை பரிகாரம்:

கடனை அடைக்க எலுமிச்சை பரிகாரம்

கடனை அடைப்பதற்கு எலுமிச்சை பேபித்தும் உதவியாக இருக்கிறது. இதற்கு நீங்கள் முதலில் வெள்ளை துணியை சிறிதளவு எடுத்து கொள்ளவும். அதில் எலுமிச்சை பழத்தை நடுவில் வைத்து கொள்ளவும். இதனை வலது கையில் வைத்து இடது கையால் பொத்தி கொள்ளவும்.

அதன் பிறகு மனதார கடவுளை நினைத்து என்னுடைய கடன் பிரச்சனை எல்லாம் நீங்க வேண்டும். பணம் சம்மந்தமாக எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. மேலும் உங்களுக்கு வேறு ஏதும் பிரச்சனைகள் ஏதும் இருந்தாலும் அதனையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

உப்பு ஜாடியை இந்த இடத்தில் வைய்யுங்க அள்ள அள்ள வற்றாத அளவில் பண வரவு ஏற்படும் 

பிரார்த்தனை செய்த பிறகு துணியை ஆறு அல்லது குளத்தில் போட்டு விடவும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சை பழத்தை உடல்முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும். இன்னொரு பாதியை ஜூஸாக பிழிந்து குடித்து விட வேண்டும்.

இதனை செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் செய்ய வேண்டும்.

அதாவது உங்களுடைய மனதிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. நீங்கள் மனதார ஒரு விஷயத்தை வேண்டும் போது அவை கண்டிப்பாக நடக்கும். அதுபோல நீங்கள் பாசிட்டிவ் ஆன விஷயங்களை தினமும் நினைத்தால் அவை தான் நடக்கும்.

அது போல பரிகாரத்தை செய்வதோடு கடன் பிரச்சனை அடைந்து விடாது, கடனை அடைப்பதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்