Kadan Kodukka Koodatha Natchathiram
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாகும். நம்மில் பலபேரின் கனவாக இருப்பது கடன் இல்லாத வாழ்க்கை தான். நம்மில் பெரும்பாலனவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியமால் அவதிப்பட்டு வருவார்கள். அதேபோல், கடன் கொடுத்தவர்கள் அதனை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவார்கள்.
இப்படி கடன் கொடுத்தவருக்கும் கடன் வாங்கியவருக்கு சிரமம். கடன் வாங்கி விட்டால் அதனை எளிதில் அடைக்கவும் முடியாது, திரும்ப பெறவும் முடியாது. ஆன்மீகத்தின்படி கடன் வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் நேரம் காலம் என்று ஒன்று உள்ளது. அதன்படியே கடன் வாங்க வேண்டும், கொடுக்க வேண்டும். அந்த வகையில், ஆன்மீகத்தின்படி இந்த பிறந்தவர்கள் கடன் கொடுக்க கூடாது என்று கூறப்படுகிறது. எனவே, கடன் கொடுக்க கூடாத நட்சத்திரக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
இந்த கிழமையில் மட்டும் கடன் வாங்கி விடாதீர்கள் ஏன் தெரியுமா…!
கடன் கொடுக்க கூடாத நட்சத்திரங்கள்:
- பரணி
- கிருத்திகை
- திருவாதிரை
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- கேட்டை
- பூராடம்
- பூரட்டாதி
27 நட்சத்திரத்தில் இந்த 12 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டும் பிறருக்கு கடன் கொடுக்க கூடாதாம். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில், கடன் கொடுக்க வேண்டுமென்றால் இந்த நட்சத்திரத்தில் இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும்.
இந்த 12 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு கடன் கொடுத்தால், பல பிரச்சனைகள் வரும். முக்கியமாக, கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் போகும். கடன் கொடுத்தவர் மற்றும் வாங்கியவர் என இருவருக்கும் பணக்கஷ்டம் உண்டாகும். எனவே, கடன் கொடுக்கும்போது இந்த 12 நட்சத்திரத்தில் உள்ளவர்களை தவிர்த்து மற்றவர்கள் கடன் கொடுக்கலாம்.
இந்த நட்சத்திரக்காரர்கள் பணத்தை தவிர வேறு பொருட்களை கடனாக கொடுக்கலாம். மேலும், உங்கள் கையால் அன்னதானம், வஸ்திர தானம் மற்றும் தானியங்கள் போன்றவற்றை தனமாக கொடுக்கலாம்.
கடன் அடைக்க உங்கள் ராசிக்கான மைத்ர முகூர்த்த நேரம் மற்றும் நாட்கள் இதோ..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |