கடன் பிரச்சனை தீர உப்பு
தினமும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் அனைவருக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நிதிநிலை சார்ந்த கஷ்டங்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிகம் கடன் பிரச்சனை உள்ளவர்கள் எப்படி இந்த கடன் பிரச்சனையை சரி செய்வது என்று, ஒவ்வொரு நாளுமே சரியாக சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் கவலைப்படுபவர்களும் அதிகம். இந்த பிரச்சனை தீர ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்காத என்று நினைப்பவர்களும் உண்டு. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையிலிருந்து எப்படித்தான் வெளிவருவது என்று தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான குறிப்பு இதோ. வாருங்கள் இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர பரிஹாரம். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்…
வீட்டில் கடன் பிரச்சனைகள் தீர:
பூஜை அறையில் அமர்ந்து, உங்களுடைய உள்ளங்கை நிறைய கல்லுப்பை 3 முறை எடுத்து மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு தடவை உப்பை எடுக்கும் போதும் ‘கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்’ என்று கடவுளை மனதார பிரார்த்தனை செய்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் துணியில் வைத்த உப்பை கட்டி பூஜையறையில் ஒரு வாரம் வைத்துவிட வேண்டும்.
மறு வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையின் செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருந்த கல் உப்பை சுத்தமான தண்ணீரில் கரைக்க வேண்டும்.
அதாவது மஞ்சள் துணியில் கட்டி வைத்திருந்த கல் உப்பை உங்களுடைய கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன்கள் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரைக்க வேண்டும்.
இப்போது உப்பு கரைசலை இடத்தில் கொட்டிவிட வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பை போல சீக்கிரம் கரைந்து போகும்.
இந்த பரிகாரம் உங்களின் கடன் பிரச்சனை தீர்ந்து வருமானம் அதிகரிக்க செவ்வாய் கோரையில் செய்வது சிறந்தது.
சாதத்தோடு இதையும் சேர்த்து கடவுளுக்கு நைவேத்தியமாக படையுங்கள்….உங்களின் செல்வ நிலை உயரும்…..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |