அள்ள அள்ள குறையாத பணத்திற்கு ஒரு கைப்பிடி கடுகு மட்டும் போதும்..

Advertisement

கடனை அடைக்க கடுகு பரிகாரம்

பணம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. இதனை பயன்படுத்தும் விதத்தில் பிரச்சனைகள் உண்டாகும். ஆடம்பரத்திற்காக ஆசைப்பட்டு சில பேர் சம்பாதிக்கின்ற பணம் போதாமல் கடனை வாங்குவார்கள். சில பேர் அத்திவாசிய செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவார்கள். இந்த கடனை அடைக்க முடியாமல் ரொம்பவும் கஷ்டப்படுவார்கள். கடனை அடைப்பதற்கு ஆன்மிகத்தில் பரிகாரம் உள்ளது. அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள அஞ்சறை பெட்டி பொருளான கடுகு பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம்..

கடுகு பரிகாரம்:

கடுகு பரிகாரம்

கடுகு பரிகாரத்தை இரவு தூங்க செல்வதற்கு முன்பு செய்ய வேண்டும். நீங்கள் தூங்குவதற்கு தனி அறை அல்லது தனியாக படுத்து கொள்ளவும்.

முதலில் ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து கொள்ளவும். இதனை தலையில் மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பிறகு இதனை கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு நீங்கள் தூங்க இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடுகை வைக்க வேண்டும். அதன் மீது நீங்கள் விரிப்பை போட்டு தூங்க வேண்டும்.

மறுநாள் காலையில் பல் தேய்த்து விட்டு விரிப்பிற்கு கீழ் இருக்கும் கடுகை அல்லி கொள்ளவும். இதனை அகல் விளக்கில் சேர்த்து கொள்ளவும். அதுனுடன் கற்பூரம் சேர்த்து எரிய விட வேண்டும்.

இது போல் வாரத்தில் ஒரு நாள் என்று மூன்று வாரத்திற்கு தொடர்ந்து செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்கிறீர்கள் என்றால் அடுத்த வாரமும் நீங்கள் செவ்வாய்க்கிழமை தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் ஒரு முறை செய்தவுடனே கடன் பிரச்சனை தீர்விற்கு வருவதை காணலாம். மேலும் பரிகாரம் மட்டும் கடன் பிரச்சனையை சரி செய்யாது.   கடனை அடைப்பதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்த பரிகாரம் கடன் பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த வழியை பயன்படுத்தி கடனை அடைக்க வேண்டும். மேலும் வீட்டில் பணவரவையும் அதிகரிக்க செய்யும்.

செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement