கழுத்தை நெறிக்கும் கடனை அடைக்க எலுமிச்சை பழம் மட்டும் போதும்..

Advertisement

கடன் பிரச்சனை தீர பரிகாரம்

மனிதனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க நேரிடுகிறது. கடன் வாங்காமல் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாது. அப்படி அவரச காலத்தில் வாகும் கடனை அடைப்பது ரொம்ப முக்கியமானது. ஒரு கடனை அடைக்க முடியாமல் மறுபடியும் கடனை வாங்கி முன்னாடி வாங்கிய கடனை அடைகின்றோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் கடனை திருப்பி செலுத்த முடிவதில்லை. கடன்களை அடைப்பதற்கு ஆன்மிகத்தில் ஏதும் வழி இருக்கிறதா என்று கோவில் கோவிலாக செல்வார்கள். மேலும் சில நபர்கள் காசு கொடுத்து என்ன பரிகாரம் சொல்கிறார்களோ அவற்றையும் செய்வார்கள். இந்த பதிவில் எளிமையான முறையில் வீட்டிலிருந்தே கடனை அடைப்பதற்கான பரிகாரத்தை பற்றி காண்போம் வாங்க..

கடன் பிரச்சனை அடைய எலுமிச்சை பரிகாரம்:

முதலில் எலுமிச்சை பழம் மூன்று எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து ஊதா பேனா ஒன்று எடுத்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு என்னென்ன கடன் இருக்கிறதோ அதை மூன்று எலுமிச்சை பழத்திலும் எழுதி கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு கடன் தான் இருக்கிறது என்றால் ஒரு எலுமிச்சை பழம் மட்டும் போதும். எனக்கு  5 கடன் இருக்கிறது நான் 5 எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளலாமா என்றால் எடுத்து கொள்ள கூடாது. முதலில் 3 எலுமிச்சை பரிகாரத்தை செய்தால் தான் அதற்கான பலன்களை பெற முடியும்.

வீட்டில் பணம் சேர மண் சட்டியை இவ்வாறு பயன்படுத்துங்கள் போதும் 

எலுமிச்சை பழத்தில் உங்களுக்கு 3000 ரூபாய் கடன் இருக்கிறது என்றால் என்னுடைய 3000 ரூபாய் கடன் தீர வேண்டும் என்று எழுதி கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை 9 செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும், காலை 6.30 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1.30 ,மணி முதல் 2 மணி வரை, இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை செய்ய வேண்டும்.

எழுதி வைத்த எலுமிச்சை பழத்தை வலது கையில் வைத்து கொண்டு வலது பக்கம் 3 மூன்று முறையும், இடது பக்கம் மூன்று முறையும் சுத்த வேண்டும்.

கடன் பிரச்சனை அடைய எலுமிச்சை பரிகாரம்

அதன் பிறகு அந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பழத்தின் உள்பகுதியில் மிளகு தூளை சேர்த்து தடவி விட வேண்டும். இதனை ஒரு அகல் விளக்கில் வைத்து அதனை சுற்றி கற்பூரத்தை வைத்து எரித்து விட வேண்டும். எலுமிச்சையானது நன்றாக எரிய வேண்டும். இதனை தென்கிழக்கு பகுதியில் வெளிப்புறம் வைத்து செய்ய வேண்டும்.

எலுமிச்சை எரிந்த பிறகு வீட்டிற்கு வெளியே கூடி விட வேண்டும். இது போல் நீங்கள் 9 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். முக்கியமாக நீங்கள் ஆரம்பிக்கும் போது எந்த நேரத்தில் செய்கின்டிறீர்களோ அந்த நேரத்தில் 9 வாரமும் செய்ய தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதனால் கடனை அடைப்பதற்கான வழிகள் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

பணம் தங்குவதற்கு பாசிப்பருப்பு மட்டும் போதும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement