Kadan Prachanai Theera Enna Vali
நாம் அனைவரும் எப்போதும் இல்லை என்றாலும் கூட ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளிப்படுகின்றோம். இவ்வாறு கடன் வாங்கும் போது நம்முடைய மனதில் தோன்றுவது என்னவோ எப்படி வாங்கிய கடனை அடைக்கப்போகிறோம் என்ற முதல் கேள்வி மட்டுமே. அதனால் எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல முயற்சியினையும், ஆன்மீக பரிகாரங்களையும் செய்வதன் மூலமாக கடன் விரைவில் அடைந்து விடும் என்பது ஒரு ஐதீகமாகவும், நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இன்றைய பதிவில் தீராத கடனையும் தீர்க்க செய்வதற்கு செய்ய வேண்டிய தானம் பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள போகிறோம்.
திருப்பதி சென்று வந்தால் கடனாளியாகும் ராசிக்காரர்ர்கள் இவங்க தானா
கடன் தீர தானம்:
உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை அனைத்தும் விரைவில் எப்படியாவது அடைய வேண்டும் என்று நீங்கள் பல பரிகாரங்களை செய்து வருவீர்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தீராத கடனையும் தீர்க்கக்கூடிய தானம் ஆனது இருக்கிறது.
அதாவது பாசிப்பருப்பு, துவரம் பருப்பு மற்றும் கருப்பு எள்ளு என இதுபோன்ற பொருள்களை நீங்கள் கஷ்டப்படும் நபர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் உங்களுடைய கடன் பிரச்சனை ஆனது படிப்படியாக குறையும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதேபோல் உணவுக்கு என்ன செய்வது என்று கஷ்டப்படும் நபர்களுக்கு உளுந்து வடையினை நீங்கள் வாங்கி தானமாக கொடுப்பது நல்லது.
சனிக்கிழமை அன்று ஒரு கருப்பு நிற பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் உங்களுடைய முகத்தினை பார்த்து விட்டு பின்பு அந்த கிண்ணம் மற்றும் நல்லெண்ணியினை யாருக்காவது தானமாக கொடுத்து விடுங்கள்.
இந்த இரண்டு முறையில் எதை வேண்டுமானாலும் தானமாக கொடுத்து விட்டு பிறகு உங்களுடைய கடன் பிரச்சனை எளிதில் அடைய செய்ய வேண்டிய முயற்ச்சியினையும் செய்வதன் மூலம் கடன் தொல்லை நீங்கி விடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |