கடன் பிரச்சனை தீர பரிகாரம்
இன்றைய காலத்தில் கடன் பிரச்சனை வருவது வழக்கமாகி விட்டது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் கடன் வாங்கும் நிலை ஏற்படும். அதற்கு காரணம் எதிர்மறை ஆற்றல்கள் அல்லது ஒருவேலை நம்முடைய கெட்ட நேரமாக கூட இருக்கலாம். இதில் இருந்து விடுபடுவதற்கு ஜோதிடம் மற்றும் கோவில்களில் சென்று பரிகாரம் செய்ய தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கடன் பிரச்சனையை தீர்ப்பதை பற்றி இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
கடன் பிரச்சனை நீங்க :
முதலில் உங்கள் வீட்டில் இந்த மாதிரியான தவறுகள் வராமல் பார்த்து கொள்வது அவசியம். வீடு ஓட்டடை இருப்பது, சிலந்தி கூடு கட்டுவது போன்றவைகள் இருக்க கூடாது. அதிலும் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வது அவசியம். வீட்டில் உடைந்த பொருட்கள் மற்றும் உபயோகபடுத்தாத பொருட்களை மூளை முடக்குகளில் வைக்க கூடாது. வீட்டில் அழுக்குகள் மற்றும் கறைகள் இருப்பதால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். நமது வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் கடன் பிரச்சனைகள் பாதி குறைந்து விடும்.
எவ்வளவு கடன் இருந்தாலும் அது உடனே தீர்ந்து விடும்..! அதற்கு வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்..!
பச்சை கற்பூரம் நீர் :
ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை எடுத்து கொள்ளவும். அதில் பச்சை கற்பூர தூளை போடவும். இந்த தண்ணீரை வெள்ளிக்கிழமையில் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வீட்டில் ஏற்படும் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
துளசி நீர் :
நமது வீட்டில் காலையிலும் அல்லது மாலையிலும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமையில் பூஜை செய்வது வழக்கம். அந்த பூஜையில் 1 டம்ளர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று துளசி இலையை போட்டு கொள்ளவும். வெள்ளிக்கிழமையில் இந்த தண்ணீரை பூஜை அறையில் வைத்து பிரார்த்தனை செய்து விட்டு, வீட்டில் மூளை முடுக்குகளில் தெளித்து வந்தால் கடன் பிரச்சனை நீங்கி விடும்.
மாவிலை (வெற்றிலை நீர் ):
நமது வீட்டில் மாவிலை அல்லது வெற்றிலை தண்ணீரை வீட்டில் தெளித்து வருவது சிறப்பு. அந்த தண்ணீரை எடுத்து மூளை முடுக்குகளில் தெளிப்பது நல்லது. வீட்டில் மூளை முடுக்குகளில் குப்பையை வைத்து கொண்டு இந்த தண்ணீரை தெளித்தால் எந்த பலனும் கிடைக்காது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |