கடன் பிரச்சனை தீர கோவில்
மனிதர்களின் வாழ்க்கையில் கடன் வாங்குவது சாதாரண ஒன்றாகி விட்டது. பணம் அதிகமாக உள்ளவர்களும் ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. கடன்களை வட்டிக்கு தருபவரிடம் வாங்குகிறோம். கடனை அடைக்க முடியாமல் வாங்கிய கடன் தொகையை விட வட்டி அதிகமாகுகின்றது. ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் என்று வரிசையாக வாங்குகின்றோம். இதனால் கடன் பிரச்சனை அதிகமாகின்றது. கடனை அடைக்க ஏதும் வழிகள் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் கடனை அடைப்பதற்கு செல்ல வேண்டிய கோவிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
கடன் பிரச்சனை தீர செல்ல வேண்டிய கோவில்:
கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு செல்ல வேண்டிய கோவிலாக திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கோவில் அமைந்துள்ள இடம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்ற ஊரில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவில் கடன் தீர செல்ல வேண்டிய தலமாக விளங்குகிறது
தீராத கடன் பிரச்சனை, வாழ்க்கையில் பிரச்சனை, இந்த பிறவி மட்டுமில்லை முந்தைய பிறவியிலும் பெற்ற கடன் போன்றவை தீர வேண்டுமென்றால் இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.
இந்த கோவிலானது தேவாரம் இடம் பெற்ற கோவிலாக உள்ளது. தேவார பாடல் இடப்பெற்றுள்ள சிவ தலங்களில் 95-வது தலமாக உள்ளது.
கோவில் பற்றிய விபரம்:
மூலவர் : சாரபரமேஸ்வரர்/ செந்நெறியப்பர்
தாயார் : ஞானாம்பிகை / ஞானவல்லி அம்மை
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்துசுத தீர்த்தம், ஞான தீர்த்தம்
தல விருட்சம் : மாவிலங்கை
வீட்டு பாத்ரூமில் 1 கைப்பிடி கல் உப்பை வைத்தால் வாஸ்துப்படி என்ன பலன் தெரியுமா..?
கோவில் வரலாறு:
பூர்வ ஜென்ம கடன்களில் இருந்து விடுபடுவதற்கு மார்க்கெண்டே முனிவர் இந்த கோவிலுக்கு வந்து சிவ பெருமானிடம் வேண்டி கொண்டார். இவரது பக்தியை கண்டு சிவபெருமான் அவருக்கு அருள் புரிந்து கடன்களில் இருந்து விடுபட செய்தார். அதனால் தான் பக்தர்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வந்து வணகுகின்றனர். இத்தலம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்றதாகும்.
கடன் தீர கோவிலில் செல்ல வேண்டிய பரிகாரம்:
தீராத கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு இத்தலத்தில் உள்ள கடவுளுக்கு 11 திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். 11 வது திங்கட்கிழமைகளில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டால் உங்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும்.
கோவில் முகவரி:
கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் – குடவாசல் செல்லும் சாலையில் 15 கி.மீ., தொலைவிலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
கடன் தீர செல்ல வேண்டிய வேறு கோவில்கள்:
சிவலோகத்தியாகர் திருக்கோயில் – சீர்காழி
தியாகராஜர் திருக்கோயில் – திருவாரூர்
தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் – திருநள்ளாறு
திருக்காலடியப்பன் திருக்கோயில் – எர்ணாகுளம்
மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – திருநின்றியூர்
வீட்டில் இதை எல்லாம் செய்யாமல் இருந்தாலே போதும் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |