Kadan Prachanai Theera Pariharam
இக்காலத்தில் நாம் என்னதான் சம்பாதித்தாலும் ஒரு சில நேரங்களில் வரவுக்கு மீறிய செலவு ஏற்படுகிறது. இதனை ஈடு செய்ய கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. எனவே, பலபேர் அவர்களின் பண கஷ்டத்திற்கு ஏற்றவாறு பிறரிடம் கடன் வாங்கி இருப்போம். இதனை எளிதில் அடைத்து விட வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கவும் செய்வோம். ஆனால், பல்வேறு தடைகள் மற்றும் எதிர்பாராத செலவுகளினால் கடனை கொடுக்க முடியாமல் தடைபட்டு கொண்டே இருக்கும். இதனால் ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர்கள் சில பரிகாரங்களை செய்வார்கள். எனவே அப்பரிகாரங்களில் ஒன்றான வழிபாட்டு பரிகாரம் பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து இப்பரிகாரத்தை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
கடன் தீர முருகன் வழிபாடு:
இப்பரிகாரம் திருச்செந்தூர் முருகப்பெருமானை நினைத்து செய்யும் ஒரு பரிகாரம் ஆகும். இழந்த செல்வத்தை பெறுவதற்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கும் திருச்செந்த்தூர் முருகப்பெருமானை தொடர்ந்து வழிபடுதல் வேண்டும்.
தீராத கடன் பிரச்சனையில் உள்ளவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் போதும் உங்களின் கடன் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். எனவே கடன் பிரச்சனை தீர திருச்செந்தூர் முருகப்பெருமானை நினைத்து வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
தீராத கடன் பிரச்சனையும் உடனே தீர்க்க வசம்பை இப்படி பயன்படுத்துங்க..!
இப்பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை செய்யலாம். முதலில் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமானின் உருவ படத்திற்கு மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கை ஏற்றி கொள்ளுங்கள்.
பிறகு, செவ்வரளி பூ மாலையை முருகப்பெருமானின் உருவ படத்திற்கு அணிவித்து கொள்ளுங்கள். இந்நிலையில் “ஓம் சரவணபவ” என்று 108 முறை உச்சரித்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். மேலும் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனையும் தீர விடும் என்று கூறி வழிபட வேண்டும்.
இதேபோல், நீங்கள் தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை அனைத்து கடன் பிரச்சனைகளும் தீரும்.
எப்பேர்ப்பட்ட கடனும் நீங்க பெளர்ணமி நாளன்று இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்க போதும்..!
இப்பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் உங்கள் கடனை அடைக்க செய்யவேண்டிய முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதாவது பரிகாரத்தையும் கடனை அடைக்க முயற்சியையும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீங்கள் நற்பலன்களை பெறலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |