எவ்ளோ கடன் இருந்தாலும் வெல்லம் மட்டும் போதும்.. கடன் தீர்ந்து பணம் பெருகும்..

kadan prachanai theera vellam pariharam

கடன் பிரச்சனை தீர பரிகாரம்

மனிதர்களாக பிறந்த அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றனர். இருந்தாலும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய வாங்குகின்ற சம்பளம் போதாமல் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்குவதும், கடனை கொடுப்பதும் சகஜம் தான். ஆனால் இதுவே பழக்கமாக இருந்தால் பணத்தை சேமிக்க முடியாது. ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கு இன்னொரு கடனை வாங்குவீர்கள். கடன் பிரச்சனையை சரி செய்வதற்கு ஏதவாது பரிகாரம் இருக்குமா என்று தேடுபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் கடன் பிரச்சனையை சரி செய்து பணத்தை பெருக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கடன் பிரச்சனை தீர 11 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியது: 

கடன் பிரச்சனை தீர 11 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியது

இந்த பரிகாரம் செய்வதற்கு வெள்ளை மொச்சை கொட்டை பயரும், வெல்லமும் தேவைப்படம்.

அடுத்ததாக சூரியன் உதிப்பதற்கு முன்பாக அதாவது காலை 6 மணிக்குள் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.

கல் உப்பு ஜாடி கீழே இந்த பொருளை மறைத்து வைய்யுங்க கஷ்டம் நீங்கி பணம் பெருகும்..!

பிறகு பூஜை அறையில் உட்கார்ந்து 27 வெள்ளை மொச்சை கொட்டை பயரும், வெல்லத்தையும் எடுத்து கையில் வைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு கடன் பிரச்னை, பணம் பெருக வேண்டும், அல்லது உங்களுடைய வாழ்க்கையில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் எல்லாம் சொல்லி மனதார வேண்டி கொள்ளவும்.

ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி” என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

அதன் பிறகு வெள்ளம் மற்றும் மொச்சை கொட்டையையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் சேர்த்து விடவும். இவை நன்றாக ஊறியதும், பசு அல்லது காகத்திற்கு வைத்து விடவும். இல்லையென்றால் காலடி படாத இடத்தில் வைத்து விட வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்து வருவதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்து பணம் சேர்வதற்கான வழிகளை கொடுக்கும்.

தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்