தைப்பூசம் அன்று இதை மட்டும் செய்யுங்க தீராத கடனும் தீர்ந்து போகும்..!

Advertisement

Kadan Theera Aanmeega Valipadu

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் நம்மிடம் அதிக அளவு இருக்க வேண்டும் என்பதற்காக நாம் கடினமாக உழைப்போம். அப்படி நாம் கடினப்பட்டு உழைக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதைக்கே செலவாகிவிடும். அதனால் நாம் யாரிடமாவது சென்று கடன் வாங்க வேண்டி இருக்கும். அப்படி நாம் வாங்கிய கடனை விரைவில் அளிக்க முடியவில்லை என்றால் நமக்கும் நமக்கு கடன் அளித்தவருக்கும் அது மிகவும் கடினமான சூழலை ஏற்படுத்தும்.

அதனால் நமக்கு உள்ள கடன் பிரச்சனைகள் அனைத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு ஆன்மிகம் குறிப்பினை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை செய்து உங்களுக்கு உள்ள கடன் தொல்லையை போக்கி பணவரவையும் அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

தைப்பூசம் வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கடன் தொல்லை நீக்கும் பரிகாரம்:

கடன் தொல்லை நீக்கும் பரிகாரம்

இன்றைய சூழலில் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். அதனை போக்குவதற்காக நாமும் அதிக அளவு முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் தோல்வியில் சென்றே முடிவடையும்.

அதனால் தான் நமக்கு உள்ள அனைத்து கடன் தொல்லைகளையும் போக்கி அதிக அளவு பணவரவை ஏற்படுத்த உதவும் ஒரு ஆன்மிக குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:

  1. பச்சை அரிசி – 1 கைப்பிடி அளவு 
  2. பச்சைக்கற்பூரம் – 1
  3. 1 ரூபாய் நாணயம் – 1
  4. வெற்றிலை – 1
  5. அகல்விளக்கு – 1
  6. நெய் – தேவையான அளவு
  7. பஞ்சி திரி – 1
  8. பூஜை தட்டு 

செய்முறை:

முதலில் உங்களது பூஜை அறையில் உள்ள முருகனின் உருவப்படத்தை எடுத்து அதனை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு பூக்கள் வைத்து பூஜை செய்யுங்கள். அதன் பிறகு அந்த படத்திற்கு நேராக பூஜை தட்டினை வைத்து அதில் 1 கைப்பிடி அளவு பச்சை அரிசியை நன்கு பரப்பி வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனின் மீது 1 பச்சைக்கற்பூரத்தை வைத்து அதனின் மீது 1 ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மீது வெற்றிலையை வைத்து இறுதியாக அதன் மீது அகல்விளக்கை வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு விளக்கு ஏற்றுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த பரிகாரத்தை வருகின்ற தைப்பூச நாளன்று மாலை 06.00 மணி முதல் 06.30 மணிக்குள் செய்வது மிக மிக நல்ல பலனை அளிக்கும்.

தப்பித்தவறி கூட இந்த திசையில் காலண்டரை மாட்டிவிடாதீர்கள் அது எந்த திசை தெரியுமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement