கடன் பிரச்சனை தீர வேண்டுமா.?
அனைவரது வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என இரண்டு இருப்பது போல் கடன் வாங்குவதும், கடனை திருப்பிக் கொடுப்பதும் என்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒரு சில இயல்பான வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இந்த சூழ்நிலை அனைவரது வாழ்க்கையில் நடந்திருக்கும் ஆனால் இந்த சூழ்நிலை இன்னும் சற்று தீவிரமாகி பெரிய அளவிலான கடன் சுமைகள் கூட நம்ம மேல் வந்து விழும் இது போதாததற்கு அவர்களது மனதிலும் ஆயிரம் கஷ்டங்களும் குமுறல்களும் ஓடிக் கொண்டிருக்கும். இதை சரி செய்வதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை அறிந்து கொள்வோம்.
கடன் தீர எலுமிச்சை பரிகாரம்:
முதலில் புதிதாக ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரில் வாங்கி வைத்துள்ள எலுமிச்சை பழத்தை கழுவி விட்டு ஈரம் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
கல் உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து வைத்தால் கடன் அடைந்து பணம் அதிகரிக்கும்..
இந்த பரிகாரத்தை செய்வதற்கு செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் செய்ய வேண்டும். இந்த நேரமானது துர்க்கை அம்மனுக்கு உகந்த நேரமாக இருக்கிறது.
பிறகு ராகு கால நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி கொள்ளவும். கையில் கழுவி வைத்துள்ள எலுமிச்சை பழத்தை வைத்து எனக்கு கடன் பிரச்சனை அடைய வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.
வேண்டிய பிறகு எலுமிச்சை பழத்தை ஒரு மஞ்சள் துணியில் சேர்த்து முடிச்சு போட்டு கொள்ளவும். இதனை தலையணைக்கு அடியில் வைத்து மூன்று நாட்களுக்கு தூங்க வேண்டும். மூன்றாவது நாள் தலையணைக்கு வைத்துள்ள எலுமிச்சை பழத்தை தலையை சுற்றி மூன்று முறை சுற்றி விட்டு தூக்கி போட வேண்டும்.
இந்த பரிகாரம் செய்து முடித்த பிறகு கடனை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
சரியாக 7 வாரத்தில் கடன் தீர்ந்து செல்வம் வந்து சேர மறக்கலாம் இதை மட்டும் செய்யுங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |