Kadan Theera Enna Seiya Vendum
பொதுவாக இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் என்னிடம் அதிக அளவு சேரவும் மாட்டேங்கிது சேர்ந்தாலும் சீக்கிரத்தில் செலவாகி விடுகின்றது என்று கவலைப்படுபவரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் எளிமையான முறையில் பணவரவை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை செய்து உங்கள் வீட்டின் பணவரவையும் அதிகப்படுத்தி பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
பணக்கஷ்டத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க இந்த ஒரு வேர் போதும்
கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம்:
இன்றைய காலகட்டத்தில் இந்த உலகில் நமக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு மற்றும் நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றாலும் அதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.
அதனால் அனைவருமே தங்களிடம் அதிக பணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் மிகவும் எளிமையான பரிகாரம் ஒன்றை செய்து நமது வீட்டின் பணவரவை அதிகரித்து கொள்ளலாம்.
அது என்ன பரிகாரம் அதனை எவ்வாறு செய்வது என்பதை எல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:
- 1 ரூபாய் நாணயம் – 1
- மஞ்சள் துணி – 1
- பச்சைக் கற்பூரம் – 1 சிறிய துண்டு
- ஜாதிக்காய் – 1
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 3
வீட்டில் திடீர் பணவரவு ஏற்பட இந்த மூன்று பொருட்களை இப்படி வையுங்கள் போதும்
பரிகாரம் செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 சிறிய துண்டு பச்சைக் கற்பூரத்தை வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 1 ஜாதிக்காய், 3 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் 1 ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து நன்கு முட்டை போல் முடிந்து கொள்ளுங்கள்.
இந்த முடிச்சிருக்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து அதனை உங்களின் பூஜை அறையில் வைத்து அதற்கு பூஜை செய்யுங்கள். பின்னர் இந்த மூட்டையை உங்க வீட்டின் வடகிழக்கு மூலையில் யார் கண்ணிலும் படாதவாறு வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்கொள்வது நல்ல பலனை அளிக்கும். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டின் பணவரவு விரைவில் அதிகரிப்பதை நீங்களே காணலாம்.
பணவரவை அதிகரிக்க பச்சை கற்பூரம் மட்டும் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |