விரைவில் கடன் பிரச்சனை தீர 27 மிளகு மட்டும் போதும்..

Advertisement

கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம் 

மனிதனாக பிறந்த அனைவருக்கும் என்ற வாழ்க்கையில் பண தேவை என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை சமாளிப்பதற்காக தான் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் சம்பாதிக்கின்ற பணம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்த கடனை அடைக்க முடியாமல் மறுக்கடனை வாங்குகிறார்கள். இப்படி கடனை அடைப்பதற்காக கடனை வாங்கி கொண்டே போனால் கடனிலிருந்து மீண்டு வர முடியாது. இந்த கடனை அடைப்பதற்கு கோவில் கோவிலாக சென்று பரிகாரங்களை செய்வார்கள். அதனால் தான் இந்த பதிவில் எளிய முறையில் கடை அடைப்பதற்கு பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

மிளகு பரிகாரம்:

கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம் 

 

கடனை அடைப்பதற்கு 27 மிளகை எடுத்து கொள்ள வேண்டும். இதை ஒரு வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டி கொள்ளவும். இந்த மூட்டையை நீங்கள் இரவு தூங்கும் தலைகாணிக்கு அடியில் வைத்து தூங்குங்கள்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பைரவர் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்லும் போது தலைகாணிக்கு அடியில் வைத்த மிளகு மூட்டையை எடுத்து செல்ல அவேண்டும். 

பிறகு கோவிலில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் மிளகு மூட்டையை நனைத்து தீபம் ஏற்ற வேண்டும். 

சனியின் வக்ர நிவர்த்தியால் இந்த மூன்று ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்க போகுது..

விளக்கில் தீபத்தை ஏற்றும் பொழுது நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களின் பெயரை சொல்லி அவரிடம் வாங்கிய கடன் அடைந்து விட வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதற்கு உகந்த நாளாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை உள்ளது. இந்த கிழமையில் நீங்கள் செய்து வந்தால் கனடா பிரச்சனை தீர்வதற்கான வழி பிறக்கும்.

அது போல இந்த பரிகாரத்தை நீங்கள் 9 வாரம் செய்து வர  வேண்டும். ஏனென்றால் ஒரு முறை செய்தவுடன் பலனை எந்த விஷயத்திலும் எதிர்பார்க்க முடியாது.  இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement