கடன் தீர பணம் சேர
பொதுவாக கடன் வாங்கும் அனைவரும் வாங்கிய கடனை எவ்வளவு சீக்கிரமாக திருப்பிக்கொடுக்க முடியுமோ அதற்குள் குடுத்து விட வேண்டும் என்று நினைத்து தான் வாங்குகிறார்கள். ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு இதற்கு எதிர்மாறாக தான் அனைத்து செயலும் நடக்கிறது. ஏனென்றால் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கான சூழ்நிலைகள் சரியாக அமையாத காரணத்தினால் கடன் அதிகரித்து கொண்டே போகும் நிலை தான் உண்டாகுகிறது. அதனால் இன்று வீட்டில் தீராத தொல்லை தரும் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேர செய்ய வேண்டிய ஒரு அருமையான பரிகாரத்தை தான் பார்க்கப்போகிறோம்.
பணக்கஷ்டம் தீர என்ன வழி:
இப்போது நீங்கள் பணக்கஷ்டம் தீர செய்யப்போகும் பரிகாரத்தை வாரந்தோறும் வெள்ளிகிழமையில் செய்து வாருங்கள். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துக்கொள்ளுங்கள்.
பன்னீர் ரோஜா- 7
வெள்ளிக்கிழமை அன்று முதலில் சுத்தமாக குளித்து விடுங்கள். அதன் பிறகு 7 பன்னீர் ரோஜாவினை கையில் வைத்து கொண்டு பூஜை அறையில் உள்ள மஹாலக்ஷ்மி அம்மையாரின் படத்திற்கு எதிரில் அமர்ந்து விடுங்கள்.
அதன் பிறகு உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கள் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக வேண்டும் என்று நினைத்து மனதார பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.
கடைசியாக உங்களின் பிராத்தனை முடிந்த பிறகு பன்னீர் ரோஜாவினை மஹாலக்ஷ்மி அம்மையாரின் காலடியில் வைத்து விடுங்கள். மேலும் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டிற்கு அருகில் அம்மன் கோவில் இருந்தால் அங்கேயும் செய்யாலாம்.
அதேபோல் இந்த பரிகாரத்தை 7 வாரங்கள் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை காலை 6 to 7 அல்லது இரவு 7 to 8 ஆகிய நேரங்களில் தான் செய்ய வேண்டும்.
இத்தகைய பரிகாரத்தை நீங்கள் செய்து முடித்த கையோடு பணம் சேர்ந்து கஷ்டங்கள் நீங்க முயற்சினையும் செய்து வாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் 7 வாரத்திற்குள் கடன் தீர்ந்து விடும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேர இப்படி செய்தால் போதுமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |