கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்..!

Advertisement

Kadan Theera Pariharam | கடன் பிரச்சனை தீர என்ன வழி

கடன் என்பது அனைவரின் வீட்டில் உள்ள விருந்தாளி மாதிரி வாரத்திற்கு ஒரு முறை மாதத்திற்கு 3 முறை வந்து விடும். ஒரு வகையில் கடன் சேர்வது என்னவோ நம்மால்  தான் ஆனால் அதனை கொடுப்பதும் நாம் கடமைதானே. ஆனால் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் கடன் கொடுப்பது வாங்குவது என்று தான் உள்ளது. அதற்கு ஒரு வகையில் நம்முடைய ஜாதகம் தான்.

ஆனால் அனைத்திற்கும் எதோ ஒன்றின் மீது பழிபோடுவதை விட அதனை எப்படி தீர்ப்பது என்றும் அதனை எப்படி சரி செய்வதும் என்று ஒரு வழி இருக்கும் அது என்னவென்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

கடன் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்:

கடை தீர்க்க சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் சம்பாதித்தாலும்  அது சரியாக இல்லை என்பது தான் அதிகளவு இப்போது உள்ளது. ஆகையால் இந்த  வழிபாட்டை செய்து விடுங்கள்.

வழிபாடு என்ற உடன் சம்பாதிக்க தேவையில்லை என்று அர்த்தம் இல்லை. நம்மால் கடன் அடைக்கமுடியாமல் தடுமாறுவதற்கு தடையாக உள்ள அனைத்தையும் தடுத்து நல்ல முறையில் சரி செய்வதற்கு வழியை தேடி தரும்.

இதையும் படியுங்கள் => கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள் 

செவ்வாய்கிழமையில் இந்த வழிபாட்டை செய்யலாம். ஏன் செவ்வாய்கிழமை என்றால் கடன் அடைக்க உகந்த நாள் செவ்வாய்கிழமை தான் கடன் வாங்குவது திங்கட் கிழமையாக இருந்தாலும் கடனை திருப்பி கொடுப்பது செவ்வாய்கிழமையாக இருக்கவேண்டும். ஒரு கடனை தவிர அனைத்து விதமான கடன்களும் அடைக்க முடியும் செவ்வாய் கிழமையில் கடன் அடைத்தால்.

 முதலில் செவ்வாய் அன்று தான் இந்த வழிபாட்டை செய்யவேண்டும். அதாவது  செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை தான் செவ்வாய் ஓரை என்பார்கள்.    அந்த நேரத்தில் காலையில் பாசிபருப்பு பாயசம் வெல்லம் கலந்து செய்து நம்மவீட்டில் இருக்கக்கூடிய தெய்வத்திடமும், குலதெய்வத்திடமும் கடனை அடைக்க மார்க்கத்தை எங்களுக்கு காட்டு என்று சொல்லி தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களுக்கு அந்த வழியை காட்டும்.   இது அனைத்தையும் காலையில் 6 முதல் 7 மணிக்குள் செய்து வழி படவேண்டும்.

பச்சை அரிசி

உங்களால் காலையில் செய்யமுடியவில்லை என்றால் அன்றைய தினமே மதியம் 1 மணி முதல் 2 மணி வரை செவ்வாய் ஓரை வரும் அந்த நேரத்தில் செய்யவேண்டிய வழிபாடு அதற்கு தேவையான பொருட்கள் பச்சை அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம்,

 இதை மூன்றையில் நன்கு கலந்து பூஜை அறையில் வைத்து இது நான் பசுமாட்டிற்கு கொடுக்கும் தானம் இதனை நீங்கள் ஏற்றுக்கொண்டு எங்களுடைய கடன் தீர வழி செய்யவேண்டும் என்று சொல்லி வேண்டிக்கொண்டு  

பசு மாடு தானம்

யாரின் பெயரில் கடன் அதிகம் வாங்கி உள்ளீர்களோ அவர்களின் கையால் பசு மாட்டிற்கு அதனை கொடுக்கவேண்டும். இதை கொடுத்த பின் தான் உங்களுடைய மத்திய உணவை உட்கொள்ளவேண்டும்.

 கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம்

 அடுத்தது மாலை 6 மணிக்கு மேல் ஒரு நெய் தீப விளக்கு ஏற்றி வீட்டில் இருக்கக்கூடிய தெய்வத்தை வேண்டிக்கொண்டு முருகப்பெருமாளை நினைத்து வேண்டிக்கொண்டு பிராத்தனை செய்யுங்கள். காமாட்சி விளக்கு வேண்டும் என்றாலும் ஏற்றிக்கொள்ளுங்கள் ஆனால் நெய் விளக்கு ஒன்று தனியாக ஏற்றிவிடுங்கள்.  

இந்த மூன்று வழிபாட்டையும் அதே நேரத்தில் செவ்வாய்கிழமையில் தான் செய்யவேண்டும். இதனை தொடர்ந்து அனைத்து வாரமும் செய்யலாம் அதில் ஒரு தவறும் இல்லை.

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement