Kadan Theera Pariharam in Tamil
அனைவருக்கும் பண கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. இக்காலத்தில் பணத்தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வாங்கிய அக்கடனை அடைக்க முடியாமல் பல தடைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். எனவே இதனை சரிசெய்யும் வகையில் அதற்கான பரிகாரங்கள் நிறைய உள்ளன. அவற்றில் முக்கியமாக விளங்குவது ஆடி மாத பரிகாரம். பொதுவாக தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பாக கூறப்படுவது ஆடி மாதம் தான். இம்மாதம் அம்மனையும் குலதெய்வத்தையும் வணங்குவதற்கும் சிறப்பான காலம் ஆகும். எனவே, இவ்வளவு சிறப்புகள் உடைய ஆடி மாதத்தின் முதல் நாளில் ஒரு சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் மற்றும் பிற கஷ்டங்கள் அனைத்தும் தீரும். எனவே அப்பரிகாரம் என்னவென்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஆடி முதல் அமாவசை அன்று இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.!
கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்:
முதலில் ஒரு சிறிய அளவிலான மஞ்சள் துணி அல்லது சிகப்பு துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் 9 கொட்டை பாக்கு, 5 ரூபாய் நாணயம் ஒன்று, வெள்ளி காசு அல்லது வெள்ளியிலான ஒரு சிறிய பொருள் மற்றும் ஒரு மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வைத்து முடிச்சியினை போட்டு கொள்ளுங்கள்.
இம்முடிச்சியினை, ஆடி முதல் நாள் அன்று மாலை 6 மணி அளவில் உங்கள் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி இம்முடிச்சியினை கையில் எடுத்து உங்களுக்கு என்ன வகையான பண கஷ்டங்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.
பிறகு, இம்முடிச்சியினை உப்பு ஜாடிக்கு அடியில் வைத்து விடுங்கள். இந்த உப்பினை எடுத்து நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தி வரலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்.
வீட்டில் ஏழ்மை நிலை நீங்கி பணவரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |