Kadan Theera Valipadu
இவ்வுலகில் கடன் வாங்குவதும் அதனை திருப்பி செலுத்துதலும் வழக்கமான ஒன்று. ஏதோவொரு காரணத்திற்காக நாம் அனைவருமே பிறரிடம் கடன் வாங்குகிறோம். இருந்தாலும் ஒரு சில வீடுகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுவார்கள். எனவே இப்பிரச்சனையிலிருந்து விடுபட நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறறோம். ஓகே வாருங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடன் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்..?
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ பெருமாளை வழிபட வேண்டும்.
முக்கியமாக பெருமாளை வழிபட செல்லும்போது துளசி மாலை வாங்கி செல்ல வேண்டும்.
கோவிலுக்கு சென்று உங்களுக்கு இருக்கும் பண கஷ்டத்தை கூறி வேண்ட வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து வாரந்தோறும் தவறாமல் செய்து வந்தால் உங்களின் கடன் பிரச்சனை குறைவதை நீங்களே உணர்வீர்கள்.
நீங்கள் கேட்ட அனைத்தையும் அள்ளி தருபவர் பெருமாள். அதுமட்டுமில்லாமல் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை மனதில் சுமந்து கொண்டிருப்பவர். எனவே உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் பெருமாளை வழிபடுவதன் அதற்கான பலன்களை பெறலாம்.
கழுத்தை நெறிக்கும் கடனும் எளிதில் காணாமல் போய்விடும்.. இந்த பரிகாரத்தை செய்தால்..
கடன் பிரச்சனையை தீர்க்கும் குலதெய்வம்:
உங்கள் குடும்பத்திற்கு முந்தைய காலங்களில் யாரேனும் சாபம் விடுத்திருந்தால் குடும்பத்தில் கடன் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். எனவே கடன் பிரச்சனை தீர குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்.
தீராத கடன் பிரச்சனையில் உள்ளவர்கள், தொடர்ந்து மூன்று பௌர்ணமிகள் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
குலதெய்வ கோவில் தொலைவில் இருந்தாலோ அல்லது குலதெய்வமே தெரியாமல் இருந்தாலோ வீட்டிலே குலதெய்வத்தை நினைத்து ஐந்து நெய் விளக்கு ஏற்றி படையலிட்டு வழிபட வேண்டும்.
ஜாதிக்காயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வீட்டில் வையுங்கள்.. பணவரவு பலமடங்கு அதிகரிக்கும்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |