தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து போக செய்ய வேண்டிய கொள்ளு பரிகாரம்..!

Advertisement

Kadan Thollai Neenga Pariharam

இன்றைய நவீன காலத்தை பொறுத்தவரை பணம் என்பது தான் அனைத்திற்கும் மூலதனமாக காணப்படுவதனால் இதனின் அத்தியாவசிய தேவை என்பது அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் பார்த்தால் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் பணம் தான் தேவைப்படுகிறது. இவ்வாறு பணத்தின் தேவை அதிகமாகி கொண்டே போனாலும் கூட நாம் சம்பாதிக்கும் பணத்தின் அளவு என்பது குறைவாக தான் இருக்கிறது. அந்த வகையில் ஒரு கட்டத்திற்கு மேல் தேவைகளை பூர்த்தி செய்ய கண்டிப்பாக கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமை ஏற்படுகிறது. இத்தகைய சூழல் அனைத்தினையும் மையமாக வைத்து கடன் வாங்கினாலும் கூட அவற்றை திருப்பி கொடுப்பதில் தான் பல பிரச்சனை மற்றும் தடங்கல் ஏற்படுகிறது. ஆகவே இன்று தீராத கடன் பிரச்சனையும் தீர்க்க செய்ய வேண்டிய எளிமையான கொள்ளு பரிகாரம் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உப்பு ஜாடியை இந்த இடத்தில் வைய்யுங்க அள்ள அள்ள வற்றாத அளவில் பண வரவு ஏற்படும் 

கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்:

நாம் நிறைய வகையான தானியங்களை பற்றி கேள்வி பட்டிருப்போம். அத்தகைய தானியங்களில் கொள்ளு தானியமும் ஒன்று. ஆகவே கொள்ளு தானியத்தை வைத்து கடன் தீர பரிகாரம் செய்யலாம் வாங்க..!

கொள்ளு- 1 கைப்பிடி அளவு

கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்

முதலில் 1 கைப்பிடி அளவு கொள்ளினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த கொள்ளை ஒரு காகிதத்தில் மடித்து எடுத்துக்கொண்டு குளித்து விட்டு விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அதன் பிறகு விநாயகர் சிலைக்கு முன்பாக காகிதத்தில் வைத்துள்ள கொள்ளினை கீழே வைத்து எனக்கு இருக்கும் அனைத்து விதமான கடன் பிரச்சனையும் மிக விரைவில் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

கடன் பிரச்சனை தீர பரிகாரம்

அடுத்து அந்த இடத்திலேயே காகிதத்தில் உள்ள கொள்ளினால் உங்களுடைய தலையினை 3 முறை சுற்றி விட்டு அந்த கொள்ளை வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.

கடைசியாக வீட்டிற்கு வந்தவுடன் விளக்கேற்றி வழிபட வேண்டும். அதன் பிறகு கோவிலில் பூஜை செய்து கொண்டு வந்துள்ள கொள்ளை பசு மாடு, காகம் அல்லது நீர் ஓடை என இவற்றில் வைத்து விட வேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நாள்:

இத்தகைய கொள்ளு பரிகாரத்தை வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று எமகண்ட நேரத்தில் அதாவது 12:00 PM முதல் 01:30 PM இத்தகைய நேரத்திற்குள் செய்து விட வேண்டும்.

இவ்வாறு நாம் கொள்ளு பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும். மேலும் கடன் பிரச்சனை அடைய இவற்றை இல்லாமல் நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியயையும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement