எப்பேர்ப்பட்ட கடனும் அடைய ஆடி வெள்ளி அன்று இதை மட்டும் செய்யுங்கள்..!

Advertisement

ஆடி வெள்ளி பரிகாரம்

கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தாலும் சம்பாதிக்கின்ற பணம் எங்கே போகிறது என்றே தெரியாது. அதுமட்டுமில்லாமல் சம்பாதித்த பணம் பத்தாமல் சில சூழ்நிலைகளில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. அவசர சூழ்நிலைக்கு கடனை வாங்கி விட்டு அதனை கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானோர். கடன் பிரச்சனையே இருக்க கூடாது என்று கோவில் கோவிலாக சென்று பரிகாரத்தை செய்கிறார்கள். இதற்கு நீங்கள் காசு கொடுத்து செலவு செய்யாமல் வீட்டிலேயே சில பரிகாரத்தை செய்யலாம். ஆடி வெள்ளி கிழமை அன்று பூஜை அறையில் சில பொருட்களை வாங்கி வைத்தாலே போதும் கடன் பிரச்சனை நீங்கும். அவை என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க.

ஆடி வெள்ளி அன்று செய்ய வேண்டியவை:

ஆடி வெள்ளி அன்று செய்ய வேண்டியவை

பொதுவாக ஆடி வெள்ளி புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. அன்றைய நாள் பெரும்பாலும் அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஆளு ஆடி வெள்ளி மிக சிறப்பான நாளாக இருக்கும். இந்நாளில் கடன் தொல்லை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கடன் தொல்லை தீர ஆடி முதல் நாள் உப்பு ஜாடியில் இதை மட்டும் மறைத்து வையுங்கள்.!

பூஜை செய்ய வேண்டிய நேரம்:

இந்த பூஜையை நீங்கள் ஆடி வெள்ளி அன்று காலை நேரத்தில் 4.30 மணி முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும். என்னால் காலையில் செய்ய முடியாது என்றால் மாலை நேரத்தில் 5 மணி முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும்.

பூஜை செய்வது எப்படி.?

பூஜை அறையில் ஒரு தாம்பூலத்தை எடுத்து கொள்ளவும், அதில் ஒரு கோடு போடாத வெள்ளை பேப்பரை எடுத்து கொள்ளவும். அதில் நாடு பகுதியில் ஸ்டார் வடிவில் வாசலில் கோலம் போடுவோம் அல்லவா அது போல போட்டு கொள்ளவும். அதன் நடுப்பகுதியில் ஓம் சக்தி என்று எழுதி கொள்ளவும். அதன் மேலே செந்தாமரை பூவை வைத்து கொள்ளவும். அதனை சுற்றிலும் மல்லிகை பூவை வைக்க வேண்டும். இதனை சாமிக்கு முன்பு வைத்து வேண்டும். அதன் எதிர்பக்கத்தில் நீங்கள் ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொள்ளவும். பூ அல்லது குங்குமத்தை எடுத்து கொண்டு ஓம் சக்தி, ஓம் சக்தி என்று உச்சரித்து கொண்டே தாம்பூலத்தில் மேலே வைத்து கொள்ளவும்.

பூஜை செய்வதினால் கிடைக்கும் நன்மை:

இது போல் செய்வதினால் உங்களின் கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்..!

பூஜை செய்தவற்றை என்ன செய்வது:

பூஜை செய்து விட்டு அதனை என்ன செய்வது என்று நினைக்கிறீர்களா.! பூஜை செய்த மூன்றாவது நாள் அந்த பேப்பரை எரித்து விடவும். பூக்களை கால்கள் படாத இடத்தில் வைத்து விடவும், இல்லையென்றால் ஆற்றில் விட்டு விடுங்கள். குங்குமத்தை எடுத்து வைத்து கொண்டு தினமும் அதனை நெற்றியில் வைத்து கொள்ளுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement