Kadan Thollai Theera Pariharam in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல முக்கியான கடமைகள் உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் என்றால் நமக்கு அதிக அளவு பணமா தேவைப்படுகிறது. அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் நம்முடைய சேமிப்பிலிருந்து நமது உழைப்பினால் கிடைக்கும் பணத்தையும் பயன்படுத்துவோம். ஆனாலும் ஒரு சில சமயங்களில் நம்மிடம் உள்ள அனைத்து பணங்களும் செலவாகிவிடும். அந்நிலையில் நாம் மற்றவர்களிடம் கடன் வாங்க வேண்டி இருக்கும். அப்படி நாம் வாங்கிய நாமும் திருப்பி தர பல முயற்சிகளை செய்வோம். ஆனால் ஒரு சில நேரங்களில் நாமல் நமது கடனை திருப்பி அளிக்க முடியாத சூழல் ஏற்படும். அப்பொழுதெல்லாம் நமது மனம் மிகவும் கஷ்டப்படும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தீராத கடனையும் தீர்க்க உதவும் மிகவும் எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன பரிகாரம் அதனை எவ்வாறு செய்வது என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
குழந்தை பாக்கியம் பெற தினமும் இதை மட்டும் சொல்லுங்கள் போதும்
Kadan Theera Pariharam in Tamil:
தீராத கடனையும் தீர்க்க உதவும் மிகவும் எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.
- அகல் விளக்கு – 2
- இலுப்பை எண்ணெய் – தேவையான அளவு
- மருதாணி விதைகள் – தேவையான அளவு
- டைமண்ட் கற்கண்டு – 2
- தாமரை தண்டுதிரி – 2
வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அமாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் உங்கள் பூஜை அறையில் நாம் எடுத்து வைத்துள்ள 2 அகல் விளக்குகளையும் வைத்து அதில் மருதாணி விதைகளை போட்டு கொள்ளுங்கள். பிறகு அதில் தேவையான அளவு இலுப்பை எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்.
பின்னர் அதில் 2 டைமண்ட் கற்கண்டுளை மற்றும் 2 தாமரை தண்டுதிரியையும் போட்டு விளக்கினை ஏற்றுங்கள். அடுத்து அந்த விளக்கிற்கு நேராக உட்கார்ந்து உங்களின் அனைத்து கடன்களும் தீர வேண்டும் என்று மனமார வேண்டி கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:
இந்த பரிகார விளக்கினை ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமை தோறும் செய்யலாம். அப்படி இல்லையென்றால் மற்ற மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் கூட செய்யலாம்.
அதேபோல் இந்த விளக்கினை காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் ஏற்றலாம். அப்படி இல்லையென்றால் செவ்வாய்க்கிழமை அன்று எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இந்த விளக்கில் உள்ள மருதாணி விதைகள் மற்றும் மருதாணி விதைகளை வாரவாரம் மற்ற வேண்டும். அதேபோல் அவற்றை கால்படாத இடங்களில் அல்லது நீர்நிலைகளில் தூக்கிப்போட்டு விட வேண்டும்.
வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட இந்த ஒரு இலை மட்டும் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |