கடன் பிரச்சனை தீர என்ன வழி
மனிதர்களின் வாழ்க்கையில் பணம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பதற்காக இரவு பகல் பாராமல் உழைக்கிறோம். ஆனால் சம்பளம் வாங்கியவுடன் பணம் காணாமல் போகிறது. செலவுகள் மற்றும் கடனை தீர்ப்பதற்கு பணத்தை செலவழிக்கிறோம். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. வாங்கிய கடனை அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்தி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சில நேரங்களில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மறுபடியும் ஒரு கடனை வாங்குவோம். இப்படி கடன் பிரச்சனை அதிகமாகி கொண்டே இருக்கும். இதனை சரி செய்வதற்காக கோவில் கோவிலாக சென்று பரிகாரத்தை செய்வீர்கள். அதனால் கடனை அடைப்பதற்கு வீட்டில் உள்ள பரிகாரத்தை செய்து கடனை அடைக்கலாம். வாங்க என்னென்ன பொருட்களை வைத்து எப்படி பரிகாரம செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
கடனை அடைப்பதற்கு வெல்லம் பரிகாரம்:
கடனை அடைப்பதற்கு பரிகாரம் செய்வதற்க்கு வெல்லம் மற்றும் வெள்ளை மொச்சைக்கொட்டை பயறு தேவைப்படும்.
காலை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது 5 மணிக்கு எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். பிறகு பூஜை அறையில் உட்கார்ந்து 27 மொச்சக்கொட்டை சிறிதளவு வெல்லத்தையும் எடுத்து கையில் வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த கடவுளை மனதில் நினைத்து கொண்டு ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும்.
கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள்
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் மொச்சக்கொட்டை பயிரையும், வெல்லத்தையும் சேர்த்து கலந்து விடவும். இதனை பசு மாடு அல்லது குருவிகளுக்கு வைத்து விடலாம். இல்லையென்றால் ஆற்றில் கரைத்து விடவும்.
பரிகாரம் செய்யும் நாள்:
மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தை வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து 11 வாரம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை சூரிய உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும்.
இது போல் செய்வதினால் உங்களின் பணக்கஷ்டம் தீர்ந்து விடும். மேலும் இந்த பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |