கடன் கொடுக்க கூடாத நாட்கள் | கடன் வாங்க கூடாத நாட்கள்
இன்றைய காலத்தில் கடன் வாங்குவது பெரியது இல்லை. அந்த கடனை அடைப்பது கடினமாகி விட்டது. அதிலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் ஒரு நொடி போதும், கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். பொருளாதாரம் அதிகமாக போகும் பொழுது மனிதர்களும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில நாட்களில் கடன் வாங்கினால் கடனை அடைக்க முடியாத போகும் நிலை உள்ளது. அது என்னென்ன கிழமைகள் என்பதை இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க..
கடன் வாங்கவும் கொடுக்கவும் கூடாத நாட்கள்:
தினமும் வரும் நாட்களில் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தில் கடன் வாங்குவது, கடன் அடைப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிகை நேரத்தில் முக்கியமாக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
கடன் அடைக்க உங்கள் ராசிக்கான மைத்ர முகூர்த்த நேரம் மற்றும் நாட்கள் இதோ..!
அதே போல சனிக்கிழமையில் கடன் வாங்கவும், கொடுக்கவும் கூடாது. அதை மீறி வாங்கினால் கடன் பல மடங்காக பெருகி விடும். கடனை அடைக்க முடியாமல் போகும் நிலை எற்படும் .
நம் முன்னோர்களுக்கு திதி செய்ய கூடிய அமாவாசை நாள் உள்ளது. அதனால் அமாவாசை தினங்களில் கடன் வாங்குவது, கொடுப்பது போல இருந்தால் குடும்பத்திற்கு ஏற்றது அல்ல.
முருகன் மற்றும் மகாலட்சுமிக்கு ஏற்ற நாளான செவ்வாய், வெள்ளி இந்த 2 தினங்களில் கடன் வாங்குவது, கொடுப்பது கூடாது. இந்த செவ்வாய், வெள்ளி சுக்கிரன் மற்றும் பணத்திற்கான முக்கியமான நாளாக உள்ளது. இந்த 2 நாளில் பணம் கொடுத்தால் பணம் திரும்ப வராமல் போகலாம்.
கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள்
மேல் கூறப்பட்டுள்ள தினங்களில் கடனை வாங்கி விடாதீர்கள். இது போன்ற தினங்களில் கடனை வாங்கி சுமையை அதிகரித்து கொள்ளாதீர்கள். அவசரத்திற்கு பணம் வாங்கினாலும் சரி, கொடுத்தாலும் சரி நாள் பார்த்து கொடுப்பது, வாங்குவது நல்லது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |