Kadikaram Kanavil Vanthal Enna Palan
பொதுவாக நமக்கு வரும் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். அதாவது, ஜோதிடத்தின்படி பிரபஞ்சம் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை கனவின் மூலம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் காணும் கனவிற்கான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரியாது. நமக்கு வந்த கனவை விடிந்ததும் பாட்டியிடமோ அல்லது அம்மாவிடமோ கூறி அதற்கான பலன்களை கேட்டறிவோம். ஆகையால், இப்பதிவின் மூலம் ஒரு கனவு பலன் பற்றி பார்க்கலாம்.
நம் வாழ்க்கையில் திரும்ப பெறமுடியாத விஷயம் என்னவென்றால் அது களமும் நேரமும் தான். அதுமட்டுமில்லாமல், காலமும் நேரமும் நமக்கு பல விஷயங்களை கற்றுகாட்டும் கடிகாரம் உங்கள் கனவில்வந்தால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா.? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கடிகாரம் கனவில் வந்தால்:
கடிகாரம் கனவில் வருவது நமக்கு நன்மைகள் வரப்போகிறது என்று அர்த்தம். அதாவது, கடிகாரம் கனவில் வந்தால் இனி நமக்கு முன்னேற்றமான வாழ்வு அமையும் என்றும், நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், நமக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட கூடாது என்பதையும் உணர்த்துகிறது.
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
சுவர் கடிகாரம் கனவில் வந்தால்:
சுவர் கடிகாரம் கனவில் வந்தால் நம் மனதில் ஏதோவொரு குழப்பம் இருக்கிறது என்றும், அதனை தெளிப்படுத்த வேண்டியும் அறிவுறுத்துகிறது. மேலும், கடிகாரத்தில் இருந்து மணி ஓசை அடிப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு இனி வரும் காலங்கள் முன்னேற்றமானதாகவும், நல்லதாகவும் இருக்கும் என்பது அர்த்தம்.
கைக்கடிகாரம் கனவில் வந்தால்:
கைக்கடிகாரத்தை நீங்கள் கனவில் கண்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ அதிக வேலைவாய்ப்பு தேடிவரும் என்றும், உத்யோக உயர்வு போன்ற மேன்மையான விஷயங்கள் நடைபெறும் என்றும் அர்த்தம்.
எங்களுடைய டெலகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |