கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும்
பொதுவாக நம் வீடு காட்டும் போதே ஒவ்வொரு விஷயத்தையும் வாஸ்து படி தான் செய்வோம். மனை போடுவது முதல் ஜன்னல் வைப்பது வரை வாஸ்து படி வீட்டை பார்த்து பார்த்து கட்டுவார்கள். வீடு கட்டி முடித்ததும் வீட்டில் உள்ள பொருட்களையும் வாஸ்து படி தான் வைப்போம். அதில் ஒன்று கடிகாரம். இந்த கடிகாரமானது நேரத்தை பார்ப்பதற்கு மட்டுமில்லை நமது வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவதற்கும் இந்த கடிகாரத்திற்கு உள்ளது. அதனால் இந்த கடிகாரத்தை வாஸ்து படி தான் மாட்ட வேண்டும். இந்த பதிவில் வீட்டில் கடிகாரம் எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
வீட்டில் கடிகாரம் மாட்டும் திசை:
வடக்கு:
வீட்டில் கடிகாரத்தை மாட்டுவதற்கு வடக்கு திசை உகந்ததாக இருக்கிறது. ஏனென்றால் இந்த திசையானது குபேர திசைக்கு உகந்ததாக இருக்கிறது. அதனால் இந்த திசையில் இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிடும். மேலும் வீட்டில் செல்வ நிலையை அதிகரித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கிழக்கு:
உங்களால் வடக்கு திசையில் வைக்க முடியவில்லை என்றால் கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கு திசையானது கடவுளுக்கு உகந்த திசையாக இருக்கிறது. அதனால் இந்த திசையில் வைத்தால் வீட்டில் செல்வ நிலை அதிகரிக்கும்.
மேற்கு:
மேற்கு திசையில் கடிகாரத்தை வைக்கலாம். இந்த திசையானது மழையின் அதிபதியான வருணனுக்கு உகந்ததாக இருக்கிறது. அதனால் வாழ்க்கையில் எல்லா விதமான வளங்களும், செல்வங்கள் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கிறது.
பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா..
தெற்கு:
நீங்கள் மறந்தும் கூட தெற்கு திசையில் மட்டும் கடிகாரத்தை வைக்காதீர்கள்.. இந்த திசையில் கடிகாரத்தை வைத்தால் வீட்டில் நிம்மதியே இருக்காது. குடும்பம் மற்றும் நிதியில் பல் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இந்த திசையானது எமனுக்கு உரிய திசையாக இருக்கிறது.
கடிகாரத்தில் கவனிக்க வேண்டியவை:
வீட்டில் கடிகாரமானது எப்போது ஓடி கொண்டே இருக்கும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் இருந்தால் அதனை மாட்ட கூடாது.
அது போல கடிகாரத்தில் எந்த வித தூசி இல்லாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
கடிகாரத்தில் கீறல் பட்டாலோ, உடைந்திருந்தாலோ அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
முக்கியமாக சுவர் கடிகாரத்தை வீட்டின் நிலை வாசலுக்கு மேல் பகுதி அல்லது வெளி பக்கமோ வைக்க கூடாது.
பெண்களே தாலி கயிற்றில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |