Kadugu Pariharam in Tamil
இந்த உலகில் இன்றைய சூழலில் பணம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அதாவது நமது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு கூட பணம் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகிவிட்டது. அதனால் அனைவருமே பணத்தை தன்னிடம் தக்க வைத்து கொள்ள பல வகையான முயற்சிகளை எடுப்போம். ஒரு சிலர் நானும் கடினமாகத்தான் உழைக்கின்றேன். அப்படி உழைத்தும் கூட என்னிடம் பணம் என்பது எனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கூட இருக்க மாட்டேங்கிது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படி மனம் வருந்துவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி பண வரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டில் பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
உங்க வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் கடுகு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
அதற்கு முன்பு இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- 5 ரூபாய் நாணயம்
- கடுகு
- ஏலக்காய் – 3
- பட்டை – 1
- கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பா
நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்
கடுகு பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அந்த கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பா முழுவதும் நிரம்புமாறு கடுகினை நிரப்பி கொள்ளுங்கள்.
பின்னர் அதன் உள்ளே நாம் எடுத்து வைத்துள்ள 3 ஏலக்காய், 1 பட்டை மற்றும் 5 ரூபாய் நாணயம் ஆகியவற்றை வைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்யுங்கள்.
பின்னர் அதனை உங்கள் வீட்டின் சமையலறையில் வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் அல்லது மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் செய்யலாம். அதேபோல் மாதம் ஒருமுறை பாட்டிலில் உள்ள பொருட்களை மாற்றி கொள்ளுங்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |